தோனி – இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு சகாப்தம்

128

2007 t20 World Cup

இறுதியாட்டம்

இந்தியா Vs பாகிஸ்தான்

கடைசி ஓவர்ல பாகிஸ்தானுக்கு 13 ரன் தேவை. கையில் இருப்பது ஒரு விக்கட். ஆனா strike ல இருப்பது மிஸ்பா. 37 ரன் அடிச்சு வெறிகொண்டு ஸ்டரைக்ல பேட்ட தட்டிட்டு இருக்காரு….


ஸ்டேடியத்தில இருக்க எல்லாரோட எதிர்பார்ப்பும்… யார் பால் போட போறா??

ஹர்பஜன் போடுவாரா..

RP Sing போடுவாரா…

Irfan போடுவாரா…

ஆனால் தோனி தேர்ந்தெடுத்ததோ ஒரு fast bowler…Joginder Singh.

Pavilion ல இருந்த திராவிட் தலையில கை வச்சிட்டாரு..

Ravi Sastri , it’s a bad decision னு commentary லயே சொல்லிட்டாரு…

முதல் பந்து – wide..

6 ballல 12 ரன் தேவை

அடுத்த பந்து – dot

5 பந்துல 12 ரன் தேவை

அடுத்த பந்து போட்டோனே மிஸ்பா ஒரு six அடிச்சு 43 ரன் அடிச்சாரு, பாகிஸ்தான் players லாம் உற்சாகத்துல ஆட ஆரமிச்சாடாங்க.

இப்போ 4 பால்ல 6 ரன் அடிக்கனும்

தோனி Joginder கிட்ட பேசுறாரு..

அடுத்த பால் ரொம்ப off side எறக்கி ஜோகிந்தர் போட, மிஸ்பா ஒரு scoop ஷாட் அடிக்க, பால் பவுண்டரி லைன் நோக்கி பறக்க, அங்கனு பாத்து ஸ்ரீஸாந்த் நிக்க…

OUTTT!!!!

India won by 6 runs..

அது வரைக்கும் தன்ன பலிச்ச எல்லாத்து முகத்துலயும் கரிய பூசி, தான் எடுத்த முடிவு சரி னு எல்லாத்து முன்னாடியும் நிரூபித்துக்காட்டுனாரு அந்த இந்திய கேப்டன்…..

அது வரைக்கும் இந்தியால மவுசே இல்லாத கிரிக்கெட் க்கு 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் னால இந்திய மக்களிடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுது…

அதன் பின்னர் சச்சின் னு ஒரு சகாப்தம் தோன்றுது… பெரிய பணக்காரங்க மட்டுமே பாக்குற கிரிக்கெட் மேட்ச்ச பட்டிதொட்டியெங்கும் வலம் வர ஆரமித்த காலம்.

யாருப்பா இந்த பையன் போடு போடுனு போடுறான். எல்லா பவுலரயும் மெரள உடுரானேனு சச்சினோட ஆட்டத்த மட்டுமே பாக்குற ஒரு கூட்டம் வரதொடங்குச்சு..

சச்சின் out ஆகிட்டா… டிவி ய off பன்னிட்டு போய்டுவாங்க…

அதுக்கப்புறம் நாளாக ஆக கிரிக்கெட் ஒட மவுசு இந்தியால அதிகரிக்க ஆரமிச்சிது…

அப்ப தான் வங்காள புலி, தாதானு எல்லோராலும் அழைக்கப்படுற கங்குலி இந்தியாவோட கேப்டனா இருந்தாரு…

தோனி இந்தியா டீம்ல அசைக்க முடியாத ஒரு பில்லரா வராறுனா அதுக்கு தாதாவும் ஒரு முக்கிய காரணம்…

தோனி எல்லாரு மாறியும் எடுத்தோனே அடி தூள் கிளப்பி அண்ணாமலை மாதிரி ஒரே பாட்டுல லாம் famous ஆகல…

பொறுமையா ஏறி சிகரம் தொட்டவரு.. . டீமோட சீனியர் ப்ளேயர்ஸ் கிட்ட ஒரு பணிவும் ஜூனியர் ப்ளேயர்ஸ் கிட்ட ஒரு கனிவும் எப்பவுமே தோனி கிட்ட இருக்கும்.

அந்த அடக்கம் பக்குவமே அவர சச்சினுக்கு அடுத்து தோனி னு சொல்லகூடிய இடத்துல நிறுத்துச்சு..

டீம வழிநடத்தி வின் பன்ன வைக்கும்போது ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதும். டீம் தோற்கும் போது விமர்சனம் வைக்கும்போது முதலிடத்தில் நின்று பலியேற்பதே தோனியின் வழக்கம்…

Ground க்கு வெளிய ஆயிரம் விமர்சனம் வைக்கட்டும், எப்பவுமே தோனி அதற்கு ground குள்ள தான் பதில் சொல்வாரு.. அவரு வாய் பேசாது.. அவரு பேட் பேசும்…..

தன்னை ஓய்வெடுக்க சொல்லி இந்தியாவே ஒரு பக்கம் அவரை தூற்றினாலும், கேப்டனா இல்லாமல் கேப்டனாக டீமை வழிநடத்தி, ஜெயிக்கவச்சு, துளியும் சந்தோஷத்தை காட்டாத அந்த முகம் biles ஐ செல்லமாக தட்டிவிட்டு உதட்டோரம் ஒரு குட்டி சிரிப்பை உதிர்த்து விட்டு பழைய நினைவுகளை அசைபோட்டு கொண்டே pavilion ஐ நோக்கி நகர்ந்தது…..

நன்றி🙏💕