காவல்துறை அதிகார திமிரும்,அரசுகளின் நீதிக்கான நிதியும்

64

சாத்தான்குளம் சம்பவத்திற்கு இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு நிதியுதவி வழங்குவது வெட்கக்கேடு. இதில் ஓட்டரசியலை அரசியலை தவிர வேறு என்ன இருக்க முடியும்.? அந்த குடும்பம் கேட்பது நீதி, நிதியல்ல. காவல்துறையை தன்னுள் வைத்திருக்கும் முதல்வரும் நிதியை குடுத்து நீதியை மறுக்கிறார்.

ஒரு வேளை கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களில் எவரேனும் ஒருவருக்கு அடுத்த சட்ட மன்ற தேர்தலில், MLA சீட் வழங்கி, மந்திரியாக்கிருப்பார்.. இது தான் வரலாறு..

வெங்கடேசன் பண்ணையார் என்கவுண்டர் செய்யப்பட்ட போது, அவரது மனைவி ராதிகா செல்விக்கு MP பதவி கொடுத்து மந்திரியாக்கி … ஒரு பாராளுமன்ற தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல் என, நான்கு மாவட்ட நாடார் ஓட்டுகளை லம்பாக அள்ளி சென்றார் தானைத் தலைவர் .

அந்த சீசன் தேர்தலுக்கு பிறகு ராதிகா செல்வியை தூக்கி ஓடையில் போட்டு விட்டார்கள். அந்த அம்மா இப்போ அந்த கட்சியில் இருக்கிறாரா இல்லையா என அந்த அம்மாவுக்கே தெரியாது…

தனது கணவர் சாவுக்கு நீதி கேட்பேன் என தேர்தலில் குதித்து, மத்திய மந்திரியாகியும் நீதியையும் கேட்கவில்லை… நியாயத்தையும் கேட்கவில்லை.. பண்ணையாரின் சாவுக்கு ஓடோடி சென்று ஆறுதல் வழங்கிய தானைத் தலைவர் முதல்வரான பின்பு அந்த விசாரணை கோப்பை குப்பையில் போட்டது தான் மிச்சம்.

இது போன்று அரச பயங்கரவாதங்களுக்கு நிதி வழங்குவது மூலம் நீதி மறுக்கப்படுவது தான் உண்மை.. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் லாக்- அப் டெத் சாவுகள் நூற்றுக்கணக்கில் நடந்து இருக்கிறது.. பெரும்பாலான சாவுகள் தலித் மக்கள் தான்.. ஒரே ஒரு சாவிற்கு கூட தண்டனை வழங்கியது இல்லை.. மாறாக தற்காலிக பணி நீக்கம் என கண்துடைப்பு செய்து பதவி உயர்வு வழங்குவது தான் இங்கு வாடிக்கை..

கோவை கலவரத்தை ஒட்டிய நிகழ்வுகளில் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத அப்பாவி இளைஞர்கள் நான்கு பேரை சுட்டுக் கொன்ற காவல் உதவி ஆய்வாளருக்கு, சில மாதங்களிலே ஆய்வாளர் பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தது அப்போதைய அரசு ..

பொதுவாக, காவல் துறையினர் செய்யும் கொலைகளில் திருட்டு வழக்கு உள்ளிட்ட குற்றவாளிகள் தான் கொலை செய்யப்படுவார்கள்.. ஆனால் எந்த குற்றச்சாட்டு வழக்கும் பதிவு இல்லாத பொதுமக்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அரிதான விசயம்.

இறந்தவர்களின் குலம், கோத்திரத்தை நாடி பிடித்து தான் இங்கு அனைத்துமே நடந்தேறுகிறது .. இறந்தவர்களின் சமூகம், அடுத்தடுத்த மாவட்டங்களில் அடர்த்தியாக இருப்பது தான் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது இரண்டு கட்சிகளுக்கும். ஒரு வேளை இதே சமூகத்தை சேர்ந்த நபர்கள் வட மாவட்டங்களில் / டெல்டா மாவட்டங்களில் மைனாரிட்டிகளாக வாழ்ந்து கொல்லப்பட்டிருந்தால் நாதியும் கிடைக்காது, நிதியும் கிடைக்காது … தலித் மக்கள் மைனாரிட்டியாக வாழும் இடத்தை விட, மெஜாரிட்டியாக இருக்கும் இடங்களில் தான் முக்கியத்துவம் பெறுவார்கள்.. அது போன்று தான் இதுவும். எல்லா சாதியினருக்கும் இது பொருந்தும்…. எல்லாம் இளவு அரசியல் தான் இங்கு ..

நன்றி – மருதம்