சிங்கள அரசை தி.மு.க ஆதரிப்பதற்கு காரணம் ஜகத்ரட்சகன் 26 ஆயிரம் கோடிக்கு அங்கு முதலீடு செய்வதால் தானா?
அதிலென்ன சந்தேகம்? முற்றிலும் உண்மையான கூற்று!
ஒரு சிங்கப்பூர் கம்பெனி வழியாக இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிக்காக சுமார் இந்திய பணத்தில் 26,950 கோடி முதலீடு செய்துள்ளார் திமுக வின் முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகன்.
3.85 Billion USD = 26,950 Crore Rupees
திமுக என்ற கட்சி ராஜபக்சே வின் இன படுகொலை கூட்டாளி என்பதை மறந்துவிட வேண்டாம், சமீப காலமாக அவர்கள் தேசிய தலைவரையும் ஈழ தமிழர்களையும் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிற தமிழ் தேசியவாதிகளையும் எப்படி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது அறிந்ததே. அதன் வெளிப்பாடே துலுக்கர் சல்மானின் நாய் விமர்சனத்திற்கும் இப்போது 800 திரைப்பட விவகாரத்திலும் அவர்கள் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்ததை நன்கு வெளிப்படையாக அறிய முடியும்.
திமுக எப்படி கர்நாடகத்தில், ஆந்திராவில் எல்லாம் சொத்துக்களையும் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் நிறுவனங்கள் பலவற்றில் முதலீடு செய்துள்ளதோ அதைப்போலவே இலங்கையிலும் தனது வியாபாரத்தை விருத்தி செய்ய முனைகிறது, இனி வரும் காலங்களில் வெளிப்படையாகவே திமுக அதை செய்யும்,அவர்கள் எப்போது இருந்தே ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தான் அதை இப்போது வெளிப்படுத்துகிறார்கள் அவ்வளவே!
தமிழர்கள் மீது சிறிதளவேணும் அக்கறை இருந்திருந்தால் ராஜபக்சேவிடம் பரிசு பொருள் வாங்கியிருப்பார்களா அதுவும் அகம் முகம் மலர்ந்த பூரிப்புடன் இன படுகொலையாளியிடம் ஒரு உணர்வுள்ள தமிழன் வாங்கியிருப்பானா? அவனை சந்திக்கவே அருவருப்படைந்திருக்க மாட்டானா?
தனக்கு இலாபம் வருமானம் வருவதாக இருந்தால் எதையும் செய்வார்கள் திமுக வினர்… யாரையும் அடமானம் வைப்பார்கள் யாரையும் காட்டிகொடுப்பார்கள் யாருக்கும் குழி பறிப்பார்கள் அவர்களை பொறுத்தவரை “வீழ்வது தமிழாக தமிழர்களாக இருப்பினும் வாழ்வது நாமாக நம் குடும்பமாக இருக்க வேண்டும்!” என்ற நற்சிந்தனை கொண்டவர்கள்!
தமிழர்கள் இன்னும் விழிக்கவில்லை என்றால் இந்த இனத்தை, நம் மண் வளங்களை இனி காப்பாற்றுவது கடினம்!