இணைய திமுக ஊதுகுழல்கள்…

63

ஒரு முக்கியஸ்தர் இறந்து போகிறார். நாகரீகம் கருதி ஒரு போஸ்ட் போட்டு இரங்கலை பகிர்ந்து கொள்வோம். அதுக்காக நீங்கள் சொல்லும் கதைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு டிரெண்ட் இருக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால் அவரை புனிதர் ஆக்கிவிடுவது. ஜெயலலிதா புனிதர் ஆனார், கலைஞர் புனிதர் ஆனார். இப்போது ஜெ.அன்பழகனும். என்ன இதில் கொடுமைன்னா, அவர் இறந்த அன்று நான் உட்பட திமுகவை கடுமையாக விமர்சிக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து பதிவுகள் இட்டோம். அதிமுக, நாம் தமிழர் உட்பட திமுகவை எதிர்க்கும் கட்சிகளின் தலைமைகள் கூட இரங்கல் தெரிவித்தார்கள். அது அரசியல் நாகரீகம்.

ஆனால் ஒரு திமுக ஆதரவு கூட்டம் இந்த மரணத்திலும் அரசியல் செய்து, மாவீரன் சாவதில்லை, சீமான் உட்பட இவர்கள் வாழ்வதில்லை என்றும், கொரோனாவிலும் வீட்டில் தங்காமல் களப்பணியாற்றிய போராளியின் மரணத்திற்கு அரசுதான் காரணம் என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக சீண்டினால் பதில் சொல்வது அவசியம் ஆகிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சில திமுக சார்பற்ற ஊடகங்கள் முரசொலி 2, கலைஞர் டிவி 2 போல பொங்கிக் கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது.

திரு.அன்பழகன் திமுக எனும் இயக்கத்திற்கு வேண்டுமானால் பலமாக இருந்திருக்கலாம். ஏனென்றால் பண பலம், ஆள் பலம் எப்போதும் அவரிடம் உண்டு. ஆனால் அதைத்தாண்டி திராவிடச் சூரியன் மறைந்தது என்று நியூஸ் 18 வைத்த பொங்கலெல்லாம் அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர் செய்திகள் கூட வைக்காத பொங்கல். திராவிடச் சூரியன் மறைந்தது என்பதை பார்த்த போது பேராசிரியர் க.அன்பழகன் மறைந்தாரா, இல்லை ஜெ.அன்பழகன் மறைந்தாரா என குழம்பிவிட்டேன்.

இன்னொரு பக்கம் பிபிசி தமிழ், முரசொலிக்கு தயாரான பிரின்ட்டை வாங்கி அப்படியே போட்டது போல் இருந்தது எல்லா போஸ்ட்டுகளும். யாருக்கு விசுவாசம் என தெரியவில்லை! இருந்துவிட்டு போகட்டும், ஆனா நீங்க இன்னைக்கு எழுதுறதெல்லாம் வைத்துத்தான் நாளைக்கு வரலாறு எழுதப்படும் போது, பிபிசியே அன்று இப்படி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறதுனு ஆரம்பிப்பாங்க. எனக்கு உங்களோட விஸ்வாசமும், ஆதங்கமும் புரியுது, ஆனா பிபிசி வேற முரசொலி வேற ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.

அப்புறம் இந்த வாழ்வதில்லை, வீழ்வதில்லைக்கு வர்றேன். நல்ல கூவல். ஆனா இப்படி சும்மா இருக்கும் எங்களையெல்லாம் கோர்த்து விட்டு கூவும் போது, யார் இதுல சிக்கி சிதையுறாங்க பாருங்க. நீங்க கட்டமைச்சு வெச்சிருக்க தலைவர்களின் பிம்பங்களை உடைக்கிறோம், உங்க ஆதரவு ஊடகங்களை தேடி பிடிச்சு நொறுக்குறோம், உங்க திராவிடச் சூரியன் ஃபர்னிச்சரை சுக்கு நூறா சிதைக்கிறோம். இதனால் நான் சொல்ல வர்றது என்னனா, எதுக்கெடுத்தாலும் எங்களை சீண்டாதீங்க. நீங்க எதிர்க்கட்சி. நீங்க யாரை சீண்டனும். ஆளுங்கட்சியை. அதவிட்டுவிட்டு எங்களை திரும்ப திரும்ப சீண்டினால், அன்பழகன் அண்ணனின் வரலாறை அவரின் இரவு நேர உணவகமான Moon Lightல், அதை ஒட்டிய பாபா ஒயின்ஸ்சில் விடிய விடிய சரக்கு ஓட்டிய வரலாற்றில் ஆரம்பித்து, தி.நகரின் கடைகளில் திமுகவுக்கு கட்டாய வரி வசூலித்ததை விவரித்து, ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவரை, உடல்நிலை சரியில்லாதவரை, கொரோனா தொற்று ஏற்பட சாத்தியம் உள்ளவரை, பிரசாந்த் கிஷோரை எதிர்த்தவரை, பிகே கொண்டு வந்த ஒன்றிணைவோம் திட்டத்தின் வழியாகவே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்க வைத்தது வரையிலானது வரை விலாவாரியாக எழுத வேண்டி இருக்கும். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறோம் என ஒரு கட்சிக்கு உண்மையாக உழைத்த உயிரை பலி கொடுத்த உங்கள் தலைமையை பற்றியெல்லாம் நிறைய நிறைய எழுத வேண்டி இருக்கும். அது நாகரீகமாக இருக்காது. புரியுமென நம்புகிறோம்.

அப்புறம் தலைவர் பிரபாகரனை ஜாமீனில் எடுத்த கதை நல்லா இருந்தது. முரசொலிக்கு அனுப்புனா மூனாவது பக்கத்துல போடுவாங்க. மறக்காம அனுப்பிடுங்க அமீர் அண்ணன்.

இப்படிக்கு

சீமானின் தம்பி

தமிழ்த்தேசிய அரசியல் விரும்பி

Rajavel Nagarajan