தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த முயற்சிப்பதாக சிறிலங்கா கொரோனா கட்டுப்பாட்டுசெயலணியின் பிரதிநிதி பிரதி பொலீஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடாத்த முயற்சிப்பதாகவும்,அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவே அனைவரின் ஒத்துழைப்போடும் தேர்தலை நடாத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது அதாவது அனைவரும் மாஸ்க் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதை எதிர்பார்ப்பதுடன் அதேபோல் சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[poll id=”5″]