சிங்கள இனவாத அரசின் போர் வெற்றி விழாவில் ஒட்டு குழு செயலாளர் டக்ளஸ்

76

இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்த இன்றைய போர் வெற்றி விழா நிகழ்வுகளில் டக்ளஸ் தேவானந்தா நின்று கொண்டு இருக்கிறார். கொடூரமான போரில் அநியாயமாக கொல்லப்பட்ட சொந்த இன பொதுமக்களை நினைவு கூற அனுமதி மறுக்கும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ வெற்றி விழா நிகழ்வில் தமிழ் மக்கள் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நின்று கொண்டு இருக்கிறார்

1990 கள் தொடக்கம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் துணை படை பிரிவாக தொழிற்படும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஆயுதக்குழு கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் தேவைகளுக்காக பல்வேறு கொடூரமான கிரிமினல் குற்றங்களை செய்து இருக்கிறது.அவையாவன

1. எண்ணற்ற கொலைகள் தொடர்பான குற்றங்கள்

2. கடத்தல் /காணாமல் ஆகியமை தொடர்பான குற்றங்கள்

3. கற்பழிப்பு தொடர்பான குற்றங்கள்

4. மணல் கடத்தல் தொடர்பான குற்றங்கள்

5. அதிகார துஸ்ப்பிரயோகம் தொடர்பான குற்றங்கள்

6. ஊழல்/ பொது நிதியை துஸ்ப்பிரயோகம் செய்தது தொடர்பான குற்றங்கள்

7. திருட்டு/ கொள்ளை தொடர்பான குற்றங்கள்

8. விபச்சாரத்திற்கு பெண்களை கடத்துதல் / தூண்டுதல் தொடர்பான குற்றங்கள்

9.அரச வளங்களை துஸ்பிரோயோகம் செய்தது தொடர்பான குற்றங்கள்

வெறும் 5000 ரூபா துஸ்ப்பிரயோகம் செய்த அரசாங்க ஊழியர்கள் தண்டிக்கப்படும் இந்த தேசத்தில் டக்ளஸ் தேவானந்தா போன்ற கோரமான கொலையாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து விலக்களிக்கப்பட்டு இருக்கிறார்கள் .

மறுபுறம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் துணையுடன் வறுமை கோட்டுக்குள் அரசாங்கத்தில் தங்கி வாழும் மக்களை இலக்கு வைத்து டக்ளஸ் தேவானந்தா போன்ற தண்டிக்கப்பட வேண்டிய கொலையாளிகளை அரசியல்வாதிகளாக இலங்கை இராணுவம் உருவாக்கி வைத்து இருக்கிறது இந்த கொலையாளிகளை இராணுவ நிகழ்வுகளில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கை அரசாங்கம் அடையாளம் காட்டுகிறது.

இனமொன்றின் குரல்