அவர்களின் இயலாமையே என்மீதான விமர்சனம் – வைத்தியர் சத்தியமூர்த்தி

139

கடந்த சில நாட்களாக தமக்கெதிரான கருத்துக்களை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்து வருவது மிகவும் மன வருத்தம் அளிக்கின்றது என வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தங்கள் மீது சில சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என அவரிடம் நாம் வினவியபோது அது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்..

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் எனக்கெதிராக கருத்துக்களை முன்வைத்து வெளியிட்டு வருவதானது மனவருத்தத்தைத் தருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தன்னை சில தமிழ் அரச அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டானது என்னை களங்கப்படுத்துவதற்கான ஒரு சில அரசியல் சார் பிரமுகர்களின் செயட்பாடகவே கருதுகின்றேன் அவர்களுக்கு என்மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே இதற்கான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.தமிழ் சமூகம் என்பால் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையினை சிதைக்கும் ஓர் செயல்பாடாக இது இருக்க முடியுமென நான் நினைக்கின்றேன்.

ஏனெனில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் எனது மாவட்டமான கிளிநொச்சி மாவட்டம் பொருளாதார ரீதியாகவும் கல்விசார் செயல்பாட்டிலும் மிகப்பெரும் வீழ்ச்சியினை சந்தித்திருந்தது. எனவே அதன் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்காக எமது புலம் பெயர் தேசத்தின் உறவுகளின் உதவிகளின் ஊடாக கல்வி வளர்ச்சி அறக்கட்டளை அமையம் உருவாக்கப்பட்டு அதனூடாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களில் கல்விசார் செயற்பாடுகளை தோற்றுவித்து இருந்தோம். எம்மால் முடிந்த அளவுக்கு பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருந்த குடும்பங்களின் கல்விசார் செயல்பாட்டிற்கான உதவிகளை தொடர்ச்சியாக எந்த வித அரசியல் பின்னணியும் இல்லாது முன் நகர்த்தி சென்றுகொன்டிருந்தோம்.

இந்த பத்து வருடங்களில் அந்த மாவட்ட மக்கள் அரசியல்ரீதியான அபிவிருத்திகளையோ அல்லது பொருளாதார ரீதியாகவோ மற்றும் கல்வி வளர்ச்சியிலோ பெரும் முன்னேற்றம் எதுவும் கண்டு இருக்கவில்லை.

எனவே இதுதொடர்பாக நான் கல்விசார் சமூகத்துடனும் சமூக ஆர்வலர்களுடனும் கிளிநொச்சி மாவட்ட கல்விசார் முன்னேற்றங்கள் தொடர்பாக பல தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன். அந்த மக்களுக்கு ஒரு மாற்றம் ஒன்று தேவை என்பதனை பல தடவைகள் வலியுறுத்திம் வந்திருந்தேன். இம் விடயமானது சமூக அக்கறையேயின்றி அரசியல்பால் செயல்பாடு அல்ல.

ஆனால் தேர்தல்காலம் நெருங்கி வருகின்ற பொழுது என்னை நோக்கி விமர்சனங்கள் வீசப்படுவது, மக்களால் ஒதுக்கப்பட்ட “அரசியல் அனாதைகளின்” செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது. ஏனெனில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இருந்து எனது துறைசார்ந்த பயணத்தில் இதுவரைகாலமும் எவ்வித விமர்சனங்களுக்கும் நான் முகம் கொடுத்தது கிடையாது எனது பணியினை திருப்திகரமாகவே செயல்படுத்தி வந்துள்ளேன். அப்போதெல்லாம் இல்லாத விமர்சனங்கள் தேர்தல் காலங்களில் மட்டும் எவ்வாறு திடீரென உருவாகின என்பது ஒரு கேள்விகுறியான விடயமாகவே பார்க்க தோன்றுகிறது. என்னையும் என் பணி சார்ந்த உத்தியோகத்தர்களையும் இந்த விடயத்தில் தொடர்புபடுத்தி முரண்பாடுகளை தோற்றுவித்து அதனூடாக அரசியல் ஆதாயத்தை தேட முனைகின்றனர். மேலும் தற்போதைய அரசுக்கும் எனக்கும் அரசியல்ரீதியான தொடர்புகள் உள்ளதான ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி அதனூடாக சுய லாபம் அடைய முயல்கின்றனர்.

மேலும் எனது தற்போதைய பதவியானது ஆயுட்கால பதவியாக இந்த அரசாங்கம் வழங்கியதாகவும் இந்த தேர்தலில் அரச சார்பு கட்சிகள வெற்றிபெறச் செய்வதற்காக என்னை இந்த அரசாங்கம் செயல்படுமாறு வற்புறுத்தியதாகவும் இதன் பலனாக சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி அந்தஸ்தினை பெற்றுக் கொள்ளும் தகுதி எனக்கு உடையதாகவும் அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவர்களின் துறைசார்ந்த அனுபவத்தினை கேள்விக்குட்படுத்தியுள்ளது. நான் தற்பொழுது வகிக்கும் பதவியானது கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் நான் இந்தப் பதவியியை பொறுப்பேற்றுக் கொண்டு இருந்தேன் அந்த காலப்பகுதியிலேயே எனக்கு இந்த வைத்தியசாலையில் ஆயுட்கால பணிப்பாளராக கடமை ஆற்றுவதற்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

மற்றும் என் துறை சார்ந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியெனும் ஒரு பணி நிலைக்கு இலங்கையில் எந்த வைத்தியத்துறை சார்ந்தவர்களும் நியமிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை என நான் நினைக்கின்றேன் . எனவே இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு மக்களுக்கான தெளிவான கருத்துக்களை முன்வையுங்கள். தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட குரோத மனப்பாங்குகளையோ ஊடகங்கள் முன் கொண்டு செல்லாதீர்கள் இவை ஓர் ஆரோக்கியமான விடயமாக கருதமுடியாது.

இந்த சமூகம் என் மீது வைத்துள்ள அதீத நம்பிக்கையானது எப்பொழுதும் சிதைந்து விடாது. நான் எனது பயணத்திலிருந்து ஒரு போதும் துவண்டு விடப்போவதில்லை .

இச்சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை மாத்திரம் வலியுறுத்த விரும்புகின்றேன் இந்த மக்களுக்கு நிச்சயமாக ஒரு மாற்றம் ஒன்று தேவை அந்த மாற்றத்தை மக்கள் தாமாகவே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அல்லது ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் அவ்வாறான நிலைப்பாடு எம் கல்விசார் சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒரு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த கட்சியையும் ஆதரிப்பவர்கள் அல்ல எமது மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் யார் நன்மைபயக்கின்ற விடையங்களை கொண்டு செல்கின்றார்களோ அவர்களே ஆதரியுங்கள் என்பதே எங்களுடைய கருத்தாகும்.

அதனை விடுத்து எம்மை தொடர்ச்சியாக விமர்சிப்பதானது “ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுததாம்” என்ற கதையாக மாறியுள்ளது எனவே இந்த விமர்சனங்களைக் கடந்து எமக்கான பயணத்தில் உத்வேகத்துடன் பயணித்துக் கொண்டுதான் இருப்போம் எமக்கான ஆதரவு எப்பொழுதும் எம் சமூகத்திடம் இருந்து கொண்டே தான் இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

Nadarajah Selvakumar