தமிழ் தேசியத்தை காயடிக்க உருவாக்கப்பட்ட திராவிடம்

269

காந்தி தான் இந்தியாவை வென்று தந்தார் என்பதும் தென்னிந்திய காங்கிரஸின் ரத்தமான பெரியார்தான் தமிழ் தேசியத்தை வளர்த்தார் என்பதும் ஒரே புரட்டுதான். பல்லாயிரம் ஆண்டு தமிழின வரலாற்றை காயடித்து 50 ஆண்டுகளில் திராவிடம் என்ற போலியை கட்டமைத்தார்கள்.

அன்றைக்கு மொழிப்போர் ஈகியர் வரலைற்றை அப்படியே செரித்து தமிழ் சமூகநீதி பேசிய வள்ளுவர் முதல் வள்ளலார், அயோத்திதாசர் ஆகியோரின் பங்களிப்பை மறைத்து இந்தியத்துக்கு எதிரான தமிழ் தேசியத்தையும் முதலாளித்துவத்துக்கு வேண்டாத சமதர்ம அரசியலையும் கடாசி வீசவேண்டி காந்தியை போல மேடையேற்றி அழகுபார்க்கப்பட்டவர்தான் பெரியாரும் திராவிடமும்.யுனெஸ்கோ விருது ஆஸ்திரிய ஸ்டாம்புபோல ஐம்பது ஆண்டுகளில் பொய் பொய்யாக காண்டுமிராண்டி மொழியில் புத்தகம் திரைப்படங்கள் போட்டு தமிழ்தேசிய வரலாற்றை திரித்தது போதாதா..

ஈழ இன அழிப்பின் சாட்சியங்களிலிருந்து தமிழ் தேசியம்மீண்டும் முளைவிட்டுவிட கூடாதென்ற நோக்கில் திராவிடிஸ்டுக்கள் ஈழ வரலாற்றை திரிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டனர்..

இலக்கியங்கள் மீடியா திரைப்படங்கள் ஏன் இப்போது Quora வில் கூட ஈழத்தமிழினத்தின் வரலாற்றை பாசிச புலிகளாகவும் ஈழத்தமிழர்கள் கடும்போக்குவாதிகளாகவும் நாளைய வரலாற்றை திராவிடம் சிங்களத்துடன் சேர்ந்து திரித்துக்கொண்டிருக்கிற இவ்வேளையிலும் திராவிட முட்டு கொடுபீர்களாயின்..

கடந்த பத்தாண்டுகள் திராவிட அரசிடம்(திமுகவிடம்) அரசியல் அதிகாரம் இருந்திருக்குமானால் தமிழ்நாட்டில் வைகோவும் கொளத்தூரானும் மட்டுதான் அப்பப்ப ஈழம் என்று கதைத்துவிட்டு போய்க்கொண்டு இருந்திருப்பார்கள். ஏனைய வெகுசன மக்களை பூரா மடைமாற்றி இன அழிப்பே நடக்கவில்லை புலிகளால்தான் மக்கள் அநியாயமாக இறந்தார்கள் என்று வரலாற்றை மாற்றி எழுதி நம்பவைத்திருப்பார்கள் இந்த திராவிடர்கள்.

ஈழமும் தமிழகமும் தமிழர்கடலில் இருக்கின்ற, இனம் மொழி பண்பாடு வரலாறு எல்லாவற்றாலும் பிணைந்துள்ள தமிழ் பெருந்தேசிய நிலப்பரப்பில் நீரால் மட்டுமே பிரிந்துள்ள இரு பகுதிகள்தாம்.
ஆகவே தமிழகமோ ஈழமோ, அதற்கு தேவையான அரசியல் “தமிழ்தேசிய” அரசியல்தான்..

உதாரணத்திற்கு திராவிடர்களால் அண்மையில் அம்பேத்கர் சுடர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஹிந்து ராமின் பத்திரிகை 2008 இல் ஈழம் எரியும்போது எழுதிய கட்டுரையை பின்னூட்டத்தில் பகிர்கின்றேன். அன்று திமுக தோற்கடிக்கப்பட்டிராவிட்டால் இன்னும் எப்படியெல்லாம் தமிழர் வரலாற்றை புரட்டி எழுதியிருப்பார்கள் என்று நினைத்து பார்க்கிறேன்..

ஒருபுறம் “திராவிடம்” “பார்ப்பனியம்” என்று சண்டைபோடுவார்கள். விளையாட்டு முடிவில் மங்காத்தாடா(இந்தியா) என்று சேர்ந்துவிடுவார்கள்..

– Karthik xan