தோலுரித்த திராவிடம்

77

திராவிடம் கடந்த சில நாட்களாக தங்களது புலித்தோலை நீக்கி நிஜ நரி தோலுடன் ஊருக்குள் ஊளையிட்டு உலாவருகிறது.

விடுதலைப்புலிகளின் பிம்பத்தை உடைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது என்கிறார் சுப.வீரபாண்டியன்.

பிரபாகரன் கிரகணங்கள் என்கிறார் ஆழி செந்தில்நாதன்..

ஈழ போர் வேறு தமிழக அரசின் வேறு. நேற்றல்ல இன்றல்ல நாளையும் நான் திராவிடன் தான். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக முழுவதுமாக களமாடுவேன் என்று எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் கூறுகிறார் முனைவர் விஜய் அசோகன்.

ஈழப்போரில் திராவிடத்தை நியாயப்படுத்தி உப்பு சப்பு இல்லாமல் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு பதிவு எழுதுகிறார் திராவிட கிணத்து மணி.

இப்படி பத்தினி வேஷத்தைக் கலைத்து பச்சையாக களம் இறங்கி இருக்கிறார்கள் போலி புலி ஆதரவாளர்கள் நிஜ திராவிட ஆதரவாளர்கள்.

இனிமேலாவது திராவிடத்தை நம்புபவர்கள் புரிந்து கொள்ளட்டும் குறிப்பாக குறிப்புடன் பேசும் திராவிட அறிவுஜீவிகளை மேடையேற்றி அங்கீகரிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் துளியாவது உணரட்டும்.

இவைகளுக்கெல்லாம் தமிழ்தேசியவாதிகள் நாங்கள் எதிரடி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் இருப்போம்.

பதிவு தமிழறிவன்.திரு.இங்கர்சால், நார்வே Ingersol Selvaraj