தீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்

166

திராவிடம் என்ற ஒன்று காலத்துக்கு காலம் சந்தர்ப்பவாத அரசியல் செய்ய தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட போலி கருத்துலகம்.தென்னிந்தியா நாடு தழுவியது என்று தமிழ்நாட்டில் வெற்று கூச்சல் போடுவார்கள்.ஆந்திரா கர்நாடாக,கேரளா எங்கும் இதை பற்றி யாரும் பேசுவது இல்லை,மற்றைய மாநிலங்கள் தமிழ்நாட்டை அடிமை சின்னமாக பார்ப்பதற்கு காரணமும் இந்த போலி திராவிடம் கருத்துலகம்தான்.கேரளாவில் இருப்பவர்கள் தங்களை மலையாளி என்றும் ஆந்திரா,கர்நாடாகவில் இருப்பவர்கள் தங்களை தெலுங்கர் என்றும் தங்கள் சொந்த அடையாளத்தை பேணும் போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழன் என்பதை தவிர்த்து திராவிட சிந்தனை என்ற போலி கருத்தியலை பேசுவார்கள்.தமிழன் தமிழனாக இருப்பதே அதை உணர்வதே தமிழர் விடுதலைக்கு தேவையான முதல் படி,நாம் யார் என்பது சரியாக எமக்கு தெரிந்து இருக்கும் பட்சத்தில்தான்,நாம் எமது வழியை கண்டு பயணிக்க முடியும்.ஆண்டாண்டு காலமாக அடுத்தவன் பின்னால் சென்று நாம் எதையும் கண்டு கொள்ளபோவதில்லை.தலைவர் பிரபாகரன் கூறியது போல்,தமிழர்கள் அடுத்தவர்கள் மத்தியில் பரிதாபத்துக்குரியவர்களாக வாழ்வதை ஒரு போதும் நாம் விரும்ப கூடாது.