திராவிடம் 1.0 vs திராவிடம் 2.0 vs திராவிடம் 3.0 – ஆபத்தின் புதிய வடிவம்

195

திராவிடம் 1.0 vs திராவிடம் 2.0 vs திராவிடம் 3.0 – நேரத்திற்கேற்ப நிறம் மாறும் பச்சோந்திகளை தோற்கடிக்கும் திராவிடர்கள்

“திராவிடம் 1.0 அண்ணாதுறை வெர்சன்
திராவிடம் 2.0 கருணாநிதி வெர்சன்
திராவிடம் 3.0 ஆழி செந்திநாதன் விஜய் அசோகன் வகையறா வெர்சன் “

இந்த பல வெர்சன் திராவிடத்தில்

திராவிடம் 1.0அண்ணாதுரை வெர்சன் :

எந்த ஒரு விடுதலை இயக்கமும் தங்களை ஆதிக்கம் செலுத்தும் பேரரசு பலவீனப்படும் நேரத்திற்க்காக காத்து இருந்து, தக்க சமயத்தில் தங்களை ஆதிக்கத்திலிருந்து விடிவித்து கொள்வார்கள். இதற்கு உலகில் எத்தனையோ விடுதலை போரட்டத்தை எடுத்துக்காட்டாக கூற முடியும். இந்திய ஒன்றியமே கூட அப்படி விடுதலை பெற்றது தான். அப்படியிருக்க ஹிந்தி மொழி திணிப்பின் போது மொழிப்போரில் தமிழர்களிடையே ஏற்பட்ட எழுச்சியில் தாங்கள் பலன் அடைய வேண்டும் என தமிழ்நாடு தமிழருக்கே என்ற எழவேண்டிய முழுக்கத்தை திராவிட நாடு என திட்டமிட்டு மடைமாற்றியது அண்ணாதுரை அரசியல். இறுதியில் அதிலும் உறுதியாக நிற்காமல் ஒன்றிய அரசின் பிரிவினைவாத தடுப்பு சட்டத்திற்கு பயந்து எங்கே தங்களால் தேர்தல் அரசியலில் பங்குபெற முடியாதோ என சீனா- இந்திய போரை காரணம் காட்டி, தமிழ் நாடு தமிழருக்கே என்று போராடாமல் இந்திய ஒன்றியத்திற்கு ஆதரவாக இருப்போம் என டெல்லியின் கால்களுக்கு இடையே Somersault அடித்து தமிழர்களை முதுகில் குத்தியது தான் அண்ணாதுரை வெர்சன். சீனா போரையும் சரியாக பயன்படுத்தவில்லை, ஆட்சியையும் சரியாக நடத்தவில்லை.

திராவிடம் 2.0கருணாநிதி வெர்சன் :

அடுத்த வந்த கருணாநிதி தொன்று தொட்டு வந்த திராவிட டெக்னிக்கான தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தொடர்ந்ததோடு மட்டுமில்லாமல், ஈழ விடுதலை இயக்கங்களை ஆரம்ப காலம் முதலே பிரித்து சிதறடிக்கும் வேலையை தன்னெழுச்சியாகவும் இந்திய ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படியும் நடத்தி கொடுத்த ஒரு கபடதாரி. எங்கும் எதிலும் உலக மகா ஊழல், ஒன்றுக்கு மூன்று பொண்டாட்டி, ரவுடிகள், பெருக்கிகள் பேச்சாளராக மாறி கொலை கொள்ளை என்று தமிழ்நாட்டில் அழித்த காலம். பிற்காலத்தில் கருணாநிதி ஈழ விடுதலை போராட்டத்திற்கு எதிராக நேரடியாகவே தமிழினபடுகொலையில் பங்கேற்று தனது ரோலை கச்சிதமாக முடித்து வைத்தது முதல் “கூலரும் கூத்தியாளும்” மூன்று மணிநேர உண்ணாவிரத போராட்டம் வரை உலகம் அறிந்ததே.

திராவிடம் 3.0 ஆழி செந்திநாதன்- விஜய் அசோகன் வகையறா வெர்சன் :

இதில் புலிகள் எதிர்ப்பை வெளிப்படையாக பேசும் கருணாநிதி கும்பல் திராவிட வெர்சன்2.0 என்றும் அண்ணாதுரை ஆதரவு பேசுபவர்கள் திராவிட வெர்சன் 1.0 என்றும் “ஐய்யகோ” தாங்களை பிரிக்கிறார்கள் என்று பேசும் புது வெரைட்டி தான் இந்த 3.0 கும்பல். தமிழ் தேசிய கருத்தியலின் எழுச்சியை முடக்க, திமுக பொருளாதாரத்தில் இறக்கிவிட பட்ட இந்த கும்பல் திராவிட 2.0 கும்பலை கண்டிப்பது போலவும், புலி ஆதரவாளர்கள் என்றும் தமிழ்தேசிய நல விரும்பிகள் என்றும் கூறி கொள்பவர்கள். தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்று எனவும் கூறி தமிழர்களை குழப்பி சிதறடிக்க துடிக்கும் இவர்களே அனைவரையும் விட மிக முக்கியமான நச்சு பாம்புகள். மற்ற இரண்டை காட்டிலும் இந்த வெர்சன் ரொம்ப புதுமையானது. இதில் எழிலன் நாகநாதன், பூவுலகு சுந்தர்ராஜன், ஆழி செந்தில்நாதன், விஜய் அசோகன், சீட்டிங் சீட்டஸ் கொஞ்சம், கார்த்திகேய சிவசேனாதிபதி, ஓலை சுவடு திருடுற கும்பல், அமெரிக்க வாழ் பெரியார் அம்பேத்கர் வட்டம் சதுரம் எல்லாம் அடங்கும். இன்று இவர்களுக்குளாக கருணாநிதி பேன் கிளப் நபர்களுக்கும், அண்ணாதுரை பேன் கிளப் நபர்களுக்கும் இடையே தகராறு போல குறளிவித்தை காட்டுவதை உணர்ந்த தமிழர்கள் கருணாநிதியின் அண்ணாத்துரையும் எல்லாம் ஒன்று தான் அப்படி ஓரமாய் போய் விளையாடுங்கள் என்று எளிதில் மறுதலித்ததை ஏற்க முடியாமல் செய்யும் சில்லறை தனமான செயல்களில் இறங்குகிறார்கள். பணம் பலம், கட்டமைப்பு பலம், ஆள் பலம், தொழில்நுட்ப பலம் எல்லாம் இருந்தும் நேர்மை என்பது இல்லாததுனால் தமிழர்களிடம் தோற்று பதற்றமடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பது, சமரசமற்ற தமிழ் தேசியவாதிகள் தான். இவர்களின் கேள்விக்கு பதில் தர முடியாமல், முகநூல் நட்பை துண்டித்தும், பதில் தராமல் நகர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்தால் பிழைத்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அந்த காலம் மலை ஏறி போயாச்சு என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இந்த வெர்சனுக்கெல்லாம் பேஸ் வெர்சன் ஒன்னு இருக்கு அது தான் ராமசாமி நாயக்கர் கண்டுபுடித்த திராவிட 0.0 வெர்சன். அதனை பலர் பதம் பார்த்துக்கொண்டிருக்கையில், நாம் அதற்கு விடுப்பு கொடுத்திருக்கிறோம்.

ரதிஸ் குமரன்