யாழில் ஹெரோயின்,மாணவர்கள் கைது

68

யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அதே இடத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயது உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழ்வியலில் எல்லாமே ஒருவித போதைதான்,கடின உழைப்பு ஒரு போதை,படித்தல்,வாசித்தல் என்று பல போதைகள் உண்டு,நல்ல போதைகளை தேர்ந்தெடுத்து நல்லா வர கவனம் செலுத்தல் வேண்டும்.தவறியும் கெட்ட போதைகளுக்கு அடிபணிந்து வாழ்வை தொலைத்துவிடாதீர்கள்.உலகம் வியந்த விடுதலை போராட்டத்தை அழித்த எதிரிகள் எங்களை முள்ளிவாய்க்காலோடு பாவம் பார்த்து விட்டுவிடுவார்கள் என்பதுதான் இருக்கிறதில் மிகப்பெரிய தப்பு கணக்கு.உலகம் போற வேகத்துக்கு உங்களை எல்லாம் கணக்கில் எடுக்க போறதே இல்லை.ஆக ஒரு பழம் பெரும் இனத்துக்கு உரிய பண்புகளை கட்டி காக்க முடியும் என்றால் மட்டும் உயிரை வைத்து கொள்ளுங்கள்,அல்லது அது உங்களுக்கு தேவையில்லாத ஒன்றாகிவிடும்.