கசப்பான இந்த நாளை மறப்பது என்பதை விட, இந்த நாளின் அரசியலை மறப்பதுதான் தமிழர்கள் தங்களுக்கு இழைத்துக் கொள்ளும் பெருந்துரோகம். தமிழர்கள் என்றைக்கும் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் இனம் என்று மறுபடியும் உணர்ந்த நாள். இலங்கையில் தமிழர்கள் அதிகமாக செல்லக்கூடி தேவாலையங்களை இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் படுகொலைக் களமாக்கிய நாள். இலங்கையின் பல்வேறு தேவாலையங்களில் ஒரே நாளில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலில், 253 பேர்வரை கொல்லப்பட்டானர். 500 க்கும் மேலானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரித்திருக்கலாம். அதற்கான சரியான தரவைத் திரட்டுவது கடினமானது.
இலங்கையில் இயங்கி வந்த “தேசிய தௌஹீத் ஜமாத்” என்ற இஸ்லாமிய இளைஞர்களை மட்டுமே உள்ளடக்கிய பயங்கரவாத இயக்கம் தன் கோரக்கரங்களை ஈஸ்டர் அன்று பிரம்மாண்டமாக விரித்து காட்டியது. ஈழப்போராட்ட காலம் தொடக்கம் இஸ்லாமியர்களை மட்டுமே உள்ளடக்கிய பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தனியாகவும், இலங்கை அரசின் பேராதரவுடனும் வளர்ந்து வந்த போதும், சிங்கள – தமிழ் மோதலில் அவர்களை யாரும் ஒருபோதும் கவனப்படுத்தியதில்லை. மிக முக்கியமாக ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் இரத்த ஆறை ஓட விட்டவர்கள் இந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக்குழுக்கள் என்பதை வரலாற்றில் இருந்து யாரும் மறைத்துவிட முடியாது. எத்தனையோ தமிழர் கிராமங்கள் தங்களின் அடையாளங்களை இழந்து நிற்பதற்கு பின்னால் இவர்களின் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் இருக்கிறது. அவர்களை இப்போதும் நாம் மறந்துதான் இருக்கிறோம். காலம் மறுபடியும் நினைவூட்டலாம்.
ஈஸ்டர் தாக்குதலைப் பொறுத்தவரை இலங்கை புலனாய்வு துறையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தக்கூடி இஸ்லாமிய அடிப்படிவாத செயற்பாட்டாளர்கள்தான் மிக முக்கியமான சூத்திரதாரிகள். அந்த தாக்குதலில் அங்கம் வகித்த ஒருவர் கூட இலங்கை அரசிடம் ஊழியம் பெறுகிற புலனாய்வாளராக இருந்திருக்கிறார். என்றைக்கும் இலங்கை அரசின் விசாரணைகள் தமிழர்களுக்கு உண்மையைச் சொன்னதில்லை. சொல்லப்போவதும் இல்லை.
வரலாறு கசப்பானதாக இருக்கலாம், ஆனால் அதை மறந்து விடுவது மேலும் கசப்பான அனுபவங்களைத்தான் பரிசளிக்கும்.
இயேசு உயிர்த்தெழுந்த நாளில் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
– வாசு முருகவேல்
