கொரோனாவால் உலகம் சந்திக்க போகும் பொருளாதார பேராபத்து…

82

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஏற்படுத்தியுள்ள ஊரடங்குகள் மூலமாக, பல இடங்களில் தொற்று கட்டுப்படுத்தப் படுவதையும் உயிர் இழப்புகள் குறைந்து வருவதையும் புள்ளிவிபரங்கள் வாயிலாக யூகிக்க முடிகிறது. அதே சமயம் தொடர் ஊரடங்குகளால் பல்வேறு நாடுகளின் இயல்பு வாழ்க்கையும் தொழில்துறைகளும் முடங்கியதால், உலகின் அநேகமான நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது… 🙁

அமெரிக்காவை மையமாக கொண்டு டாலர் மதிப்பின் வாயிலாக உலகின் பல்வேறு நாடுகள், கச்சா எண்ணெய் முதல் கணினிகள் வரை தங்கள் வர்த்தக பரிமாற்றங்களையும் பொருளாதார சந்தை வளர்ச்சியையும் கணக்கிடுவது வழக்கம். அத்தகைய அமெரிக்காவில் இந்த கொரோனா தாக்கத்தால் தற்போது வரலாறு காணாத வேலையிழப்பும் பொருளாதார சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6.6 மில்லியன் அதாவது 66 லட்சம் பேர் அங்கு வேலையிழந்து உள்ளனர் !

அமெரிக்காவில் வேலை போனால் நம்மை என்ன செய்துவிடப்போகிறது என்று மற்ற நாடுகள் நினைத்து கடந்து போய்விடமுடியாது… அமெரிக்காவின் பொருளாதாரத்தை மையமாக வைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் செய்துகொண்டு இருக்கும் அனைத்து நாடுகளும், இந்த வேலையிழப்பு தாக்கத்தின் விளைவுகளை விரைவில் அவர்கள் நாடுகளின் உள்ளேயும் சந்திக்கப் போகின்றன என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் !

அமெரிக்காவை மையப்படுத்தி உலகத்தின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் கணினி தொழிநுட்பத்துறையும் இந்த பிரச்சனையால் கடும் சிக்கலை எதிர்கொள்ளும். அதே போல ஐரோப்பா யூனியனில் இருக்கும் பல நாடுகள், பிரிட்டனை போல கூட்டமைப்பில் இருந்து உடைந்து வெளியேறலாம் என்றும் எதிர்பார்க்கலாம் !

கொரோனோவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விரைவாகவும் முறையாகவும் வெளியிடாதவரை… கொரோனா உயிருக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைக்கும் கேடுதான் !!!

Kumar