எட்டு திக்கும் எழும் எட்டப்பர்கள்

74

காட்டிக்கொடுத்து விட்டு கை கால்

நீட்டிக் கொண்டிருந்து வடிவாய்

தங்கத்தட்டில் சாப்பிடுகிறார்கள்

வெக்கங் கெட்டு தாங்களும்

தமிழன் என்று சொல்லி சிலபேர்!

விடுதலையின் வேர்களை

அடியோடு கிளறியெறிந்து

சிங்களம் போட்ட பிச்சைக்காய்

மாவீரர் இலட்சியங்களை கூட

கொச்சை படுத்தி கேவலப்படுத்திய

கேடுகெட்ட குள்ளநரிக் கூட்டமொன்று!

வெள்ளை வேட்டியோடு இப்போ

வீட்டுக்கு வீடு வருகிறார்களாம்

பாதிக்கப்பட்ட உங்களுக்கு

நீதி பெற்றுத் தருகிறோம் என்று!

ஆனால் நட்டநடு வீதியில் விட்டதே

இந்த வீணையோடு வீட்டுக்காரரும்

கருணாவும் கள்ளக்கூடங்களும்தான்!

பாலாண்ணாவின் மூத்திரத்தை

(மன்னித்டுங்கள் இந்த வார்த்தைக்கு)

முதலில் பருகச் சொல்லுங்கள்

சுமந்திரனையும் சார்ந்தவர்களையும்

அந்தப் பெயரைக்கூடச் சொல்லத்

தகுதியற்ற அரசியல் கூட்டமொன்று!

விடுதலையைப் பற்றி பேசுகிறார்களாம்!

திட்டித்தீர்க்க ஆயிரம் சொற்களை

தமிழன்னை கொட்டித்தந்திருக்கிறாள்

ஆனால் பொதுவெளி என்பதனாலும்

வயதில் குறைந்தவர்கள் பார்ப்பதனாலும்

என் வாய்பொத்தி அண்ணன் பெயரை

முடிந்தவரை காப்பாற்றிப் போகிறேன்!

விடுதலையை நேசிக்கிற ஒவ்வொரு

தமிழரின் கைகளும் தங்கள் வாக்கினை

தலைவனையும் தத்துவங்களையும்

வளமாக்கிய மாவீரச்செல்வங்களையும்

எவரெல்லம்ம் தூக்கிச் சுமக்கிறார்களோ

அவர்களுக்கு அளித்துவிட்டு தமிழினமே

உலகறிய உங்கள் உரிமையை மீட்டெடுங்கள்!

நன்றி – செந்தளிர்

மாவீரரின் தாகம் மகத்தான தமிழீழத்தாயகம்!