தம்பி கொஞ்சம் நில்லுப்பா…

122

🗣தம்பி டேய்!🗣

ஊரில கள்ள மண் ஏத்துறவன் ஆர்”

“எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

அதுக்கு பின்னால இருக்கிறவன் ஆர்❓”

“அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

மாவீரர் துயிலும் இல்லத்தை உடைச்சு அதுக்குள்ளை கள்ள மண் ஏத்துறவன் ஆர்❓”

“அந்த நாய்களும் எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

எங்கட சனத்தை ஏமாத்துற அரசியல்வாதிகள் ஆர்❓”

“எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

கஞ்சா கடத்துறவன் ஆர்❓

“எங்கட ஆக்கள் தான் அண்ணை”

அதுக்கு பின்னால இருக்கிற அரசியல்வாதிகள் ஆர்❓”

“அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

வாள் வெட்டு குறூப்பாம். அது ஆரடா❓”

“எங்கட பொடியள் தான் அண்ணை❗”

“அவங்களை பிடிச்சா பிணையில எடுத்து விடுகிறது ஆரடா❓”

“அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

“லஞ்சம் வாங்குற பொலிஸ் ஆர்❓”

“எல்லாரும் இல்லை. ஆனாலும் எங்கட தமிழ் பொலிஸ்தான்”

“அதிகார துஸ்பிரயோகம் செய்யுறவன் ஆர்❓”

“எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

“பாலியல் வன்கொடுமை செய்யுறவன் ஆர்❓”

“எங்கட ஆக்கள் தான் அண்ணை”

“குற்றவாளிகளை காப்பாத்துறவன் ஆர்❓”

“அதுகும் எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

“கோடி கோடியாய் சிங்களவனிட்ட வாங்கினது ஆர்❓”

“எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

“சிங்கள பேரினவாத ஆட்சிக்கு முட்டுக்குடுக்குறது ஆர்❓”

“எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

“சாகும் வரை திரும்ப திரும்ப தேர்தலில் நிக்கிறது ஆர்❓”

“எங்கட ஆக்கள் தான் அண்ணை❗”

“மொத்தத்தில எங்கட சனத்தை ஏமாத்தி எங்கட இனத்தை அழிக்கிறது ஆர்❓”

சிங்களவனா❓”

தமிழனா❓”

“எங்கட தமிழன் தான் அண்ணை❗”

“உனக்கு கோபம் வருகுதல்லோ. ஏலாக்கட்டத்தில என்ன செய்வாய் தம்பி❓”

“கையில பிஸ்ரல் இருந்தால் உந்த நாய்களையெல்லாம் நடு றோட்டில விட்டு சுடுவன் அண்ணை”

“ஆ.. அதைத்தாண்டா இயக்கம் முந்தி செய்தது. அதுக்கு பேர் மண்டையில போடுறது.

நன்றி – Karikalan Nilavan