பெயர் :- ஈழத்(!!!)தமிழன்
வேறுபெயர்கள்:- பயங்கரவாதி, இனவாதி , அகதி
வயது:- கல்தோன்றி மண்தோன்றாக் காலம்
இனம்:- தமிழ்
தொழில்:- அடிவாங்குவது
அடிவாங்கி இடம்:- காவல் நிலையம், இராணுவ நிலையம், சிறைச்சாலை, ஒழுங்கை, வீதி, இப்பொழுது பல்கலைக்கழகம். ஏரியா பூரா வாங்கி இருக்கிறோம் எதைச் சொல்ல.
உபதொழில்:- சொந்த இனத்தவனை மட்டும் காட்டிக்கொடுப்பது.
பெருமைப்பட்டுக்கொள்வது:- ஆண்ட பரம்பரை, மற்றும் உலகின் மூத்த குடி
விட்டது:- தன்மானத்தை
விடாதது:- சாதியை
செய்யத்துடிப்பது:- அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் கோயில் திருவிழா
செய்யாதது:- ஒற்றுமையாக இருப்பது
மறந்தது:- கல்வியை
மாற்ற நினைப்பது:- வட்டி தவணையை
மாறதது:- ஊர் ஏரியா கேட்டு சாதியை உய்தறிவது
பூர்விகக் குணம்:- சோரம் போதல்
உப குணம் :- மறதி
வீரம் என்பது:- வெளிநாட்டுக்கு போன பின்னர் கார்த்திகையில் வருவது.
நம்புவது:- ஆட்சி மாற்றத்துடன் விடிவு வரும்,காசு வந்தா சந்தோசம் கூட வரும் என்று
நம்பாதது:- உண்மை பேசுபவனை,இன்னொரு தமிழனை
சாதனை:- குடியில் முதலிடம்,டிசைனாக சீதனம் வாங்குதல்
எதிர்காலத்திட்டம்:- தொடர்ந்தும் குடியில் முன்னிலை வகிப்பது.