நாம் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது.ய

102

•நாம் சாகடிக்கப்படலாம். ஆனால்
ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது.

எமது போராட்டம் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் அதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அல்ல

ஏனெனில் போராட்டத்திற்கு ஒருபோதும் தோல்வி இல்லை.
எனவேதான் எம்மை தோற்கடிக்கப்பட முடியாது என்கிறோம்.

நாம்,
உரிமையை இழந்தோம்
உடமையை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்- ஆனால்
உணர்வை இழக்கவில்லை.

காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது
தமிழன் மட்டும் அடிமையாக கிடந்திட முடியுமா?

என்ன காரணத்திற்காக போராடினோமோ
அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.

எனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது
தவிர்க்க முடியாதது.

குனிந்து வா என்றால் தவழ்ந்து செல்லும் விசுவாசிகளாக எம் தலைவர்கள் இருக்கலாம்.

எதிரி வீசும் இறைச்சித்துண்டுக்கு வாலாட்டும் நாய்க்குட்டிகளாகவும் அவர்கள் இருக்கலாம்.

ஆனால் தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டத்தை அடக்கிவிடலாம் என எதிரி நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது.

எனவேதான் உரத்து சொல்கிறோம்
இறுதி வெற்றி உறுதி தமிழ் மக்களுக்கு.

ஒன்றாய் கூடுவோம்
ஒருமித்து குரல் எழுப்புவோம்

எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம்.
வெறுமனே அழுது விட்டு ஓய்ந்து போவதற்காக அல்ல
மாறாக மீண்டும் நாம் எழுவதற்காக!

ஒரு சந்ததி வெற்றி பெறுகிறது எனில்
அதன் பின்னால் பல சந்ததிகளின் முயற்சி இருந்திருக்கும்.
எமது அடுத்த சந்ததியின் வெற்றிக்கு
தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்

பல்லாயிரம் பேரை ஓரேயடியாக கொன்றால்
போராட்டத்தை அடக்கிவிட முடியுமா என எம்மில் சோதித்தார்கள்.
நாம் பரிசோதனை எலிகள் இல்லை என்பதையும்
நாம் பெருமை மிக்க வீரம் செறிந்த
போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் என்பதையும்
எதிரியின் முகத்தில் காறி உமிழ்ந்து காட்ட வேண்டிய தருணம் இது.