
எம் இனத்தின்
அடையாளம்
அழிந்தொழிந்த
நாள்….
வெறியர்கள் நடாத்திய
வேடிக்கையான
விளையாட்டில்
வெந்து எரிந்தது
எம் வேரின் அடையாளம்
ஆசியாவின் மிகப்பெரிய
நூலகம் என
ஆச்சரியப்படும் அளவிற்கு
அடியூன்றியது எம்
யாழ் மண்ணின் நூலகம்
யார் அறிவீர்…..
எம் மண்ணின் வாசனையை
யார் அறிவீர்…..
எம் வரலாறினை
யார் அறிவீர்….
தமிழனின் பொக்கிஷத்தை
யார் அறிவீர்……
தமிழ் மொழியின்
அடிச்சுவடு இது
தமிழர்களின் அடையாளம் இது
எம் இனத்தின் அடையாளம் இது
எம் இடத்தின் அடையாளம் இது
இன ஒழிப்பில் எமக்கு விதித்த
அகம்பாவம் இது…..
அரக்கன்களே
வெறியர்களே
தீ மூட்டி
தீக்கிரையாக்கினாய்
தீர்ந்து போகவில்லை
எம் அடையாளம்……
எரித்து சாம்பலாக்கியது
அபூர்வ நூல்களை தான்
எம் அறிவின்
எம் எழுத்தின்
கருவூலத்தை அல்ல
எரிக்க எரிக்க
எழுத்தாளர்களும்
எழுத்துக்களும்
ஓய்வெடுக்கவில்லை
ஓய்வின்றி எழுதிக்கொண்டே தான்
இருக்கின்றோம்
ஏராள நால்களை
எதிரிகள் நீங்களும்
படிப்பதற்கு………
எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்..
-சே குவேரா-