ஈழம் சார் திரைபடங்கள் எப்போது? எதிர்ப்பில் காலம் கரையுமா!

116

“800” படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டார். இனப்படுகொலைக்கு வெள்ளை அடிக்கும் முத்தையா முரளீதரனுக்கு மிகச் சரியான எதிர்வினையைச் செய்திருக்கிறோம். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. தொடர்ந்து எதிர்வினையாற்றுவது மட்டுமே நமது கடமையா?.

1/ ஏன் நாம் ஈழ விடுதலைக்கு ஆதரவாக, இனப்படுகொலையை உலகுக்கு எடுத்து சொல்ல இதே சினிமா என்ற ஊடகத்தை பயன்படுத்தவில்லை. முரளிக்கு எதிராக இவ்வளவு தமிழர்கள் கூடுகிறார்கள் என்றால், இவ்வளவு பேரும் ஈழத்தின் பக்கம் நிற்கிறவர்கள்தானே?. இவர்களில் வசதி வாய்ப்பு கொண்ட ஒரு ஆயிரம் தமிழர்கள். இல்லை… நூறு தமிழர்கள் திரண்டால் ஒரு சினிமாவை எடுத்து விட முடியும் இல்லையா?. ஏன் அது நிகழவில்லை.

2/ ஈழம் தொடர்பான மிக நியாயமான சினிமாவை எடுத்தால் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என்று பெரும்பாலனவர்கள் சொல்கிறார்கள். அதற்கு சில நிகழ்வுகள் ஆதாரமாகவும் உள்ளன. அப்படியானால் அந்த கருத்து சுதந்திரத்தை பெறுவதற்கு தமிழகத்தில் இருக்க கூடிய சினிமா சார்ந்தவர்கள், கருத்து சுதந்திரம் குறித்து முழங்குகிறவர்கள், அரசியல் கட்சி மற்றும் அரசியல் அமைப்புகளை வைத்திருப்போர் என்ன செய்யப் போகிறார்கள்?. அவர்களுக்கு ஆதரவாக வெகுமக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

– வா.மு