உண்மைதான்..!
காலங்கள் மாற எல்லாம் கடந்துபோகும் ஆனால் ஈழத்தமிழர்களாய் நாங்கள் எதையும் மறக்கவில்லை.

ஒரு பெண் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டால் என்பதற்கு நீங்கள் ஆறுதல் சொல்ல சென்றீர்கள் அது ஏற்கத்தக்கதே.

அதற்காக அம்மானில காவல்துறை உங்களை வழிமறித்து தாக்கி, தள்ளிவிட்டு நீங்கள் வீழ்ந்து காயமடைந்தீர்கள் அது தவறானதே.

சாதாரணமாக வீழ்ந்ததற்கே இத்தனை கலவரம், இத்தனை கண்ணீர், இத்தனை கூக்குரல், இத்தனை அரசியல் என்றால்…

உங்களுக்கு நினைவிருக்கிறதா
உங்கள் ஆட்சியில் (காங்கிரஸ்) ஈழத்தமிழினம் எத்தனை துன்ப வடுக்களை சுமந்தது என்று.

அள்ளி அள்ளி குண்டுகளை கொடுத்தீர்கள், கொடுத்தது மட்டுமன்றி அதை கொத்து கொத்தாக வீச உங்கள் படைகளை ஈழத்துக்கு அனுப்பி வைத்தீர்கள்.

அவர்கள் மக்களை சித்திரவதை புரிந்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, வயது வேறுபாடின்றி வன்புணர்ந்த போதெல்லாம் வாய்மூடி வேடிக்கை பார்த்தீர்கள்.

அமைதிபடை எனும் பேரில் காண்பவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளி, ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை அநாதையாக்கி, எண்ணிலடங்காத மக்களை கொன்று தீர்த்தீர்கள்.

இறுதி யுத்தத்தில் பிரபாகரனின் குடும்பத்தில் எவரும் உயிருடன் இருக்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்து, பாலச்சந்திரன் என்ற சிறுவனைக்கூட நெஞ்சில் குண்டுதுளைக்க காரணமாகவிருந்தீர்கள்.

உங்கள் அரசியல் சுயநலத்திற்காக இரக்கமே இல்லாமல் இத்தனையும், இதற்கு மேலும் செய்துவிட்டு இப்போது
இந்த நாடகமோ..!

நீங்கள் அரசியல் நல்லவர்களாக மாறலாம், ஆட்சி உங்கள் கைகளில் மறுபடியும் தவழலாம்
ஆனால் மானத்தமிழனாய் நாங்கள் எதுயும் மறக்கப்போவதில்லை.

ஈழத்தமிழன்-கவியாழன்