பத்திரிகை, ஊடக உலகில் சுமார் 24 ஆண்டுகள் முழு நேரம் பணியாற்றுகிற வகையில் பல ஊடக ஆளுமைகளை நான் பார்த்திருக்கிறேன்.
அவர்களில் முதன்மையாக நிற்பவர் சகோ. ஏகலைவன் . இது முகத்துதி அல்ல, உண்மை.
2009 கால கட்டத்தில் தமிழ் நாட்டின் அவ்வளவு ஏன் உலகின் ஒட்டு மொத்த பத்திரிகை, ஊடகவியலாளர்களும் இலங்கை அரசின் அறிக்கைகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த நிலையில், குமுதம் டாட் காம் இணையத்தில் ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த உண்மையான அவலங்களைத் தோலுரித்துக் கொண்டிருந்த ஒரே பத்திரிகை ஊடகவியலாளர் ஏகலைவன் மட்டுமே.
குமுதம் டாட் காம் வளர்ச்சி உலகின் முதன் முறையாகச் சேனல் நிர்வாகத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது தனி வரலாறு.
அப்போது ஏகலைவனுக்குக் கடல் கடந்து வந்த ஆஃபர். “நாங்கள் கொடுக்கும் தகவல்களை மட்டும் செய்தியாக்குங்கள் , உங்களுக்கு ஒரு வீடு, ஒரு கார் கொடுக்கிறோம்” என்பது.
சர்தான் போடா என்று சொல்லிய நேர்மையாளர். இன்று அவரது உழைப்பில் கட்டிய வீட்டிற்கு EMI கட்ட மாதம்தோறும் கண்களில் இரத்தக் கண்ணீர் வடிப்பது வேறு.
அதுமட்டுமல்ல, அதன் பிறகும் வேறு எந்தப் பத்திரிகை, ஊடகவியலாளர்களும் பேச அல்ல சிந்திக்கவே அச்சப்பட்டு அலறிய “திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதிய தூக்குக் கயிற்றில் நிஜம், நளினி எழுதிய புத்தகம், முள்ளிவாய்க்கால் முடிவல்ல, சிவராசன் டாப் சீக்ரெட் ” ஆகிய அதிர வைக்கும் நூல்களை துணிச்சலாகப் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் வெளிக்கொண்டு வந்தவர்.
தமிழ் தமிழ் என்றாலும் முரண்பட்டு நிற்கும் தலைவர்களை ஒரே மேடையில் அமர வைத்த பக்குவத்திற்குச் சொந்தக்காரர் .
இன்றைய பத்திரிகை, ஊடகவியலாளர்கள் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை அதிகம்.
அவரது நேர்காணல் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் இந்த எழுவர் விடுதலை – விடுதலைக்கான விவாதம்.
12 ஆண்டுகளில் தொலைக் காட்சிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான நேரலைகளின் முதுகெலும்பாக நின்றவன் நான்.
மேலும், தமிழ்நாடு இந்திய ஒன்றியம் மட்டுமல்ல உலக அளவில் முதன் முதலாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா ஐநா மனித உரிமைகள் மாநாட்டின் உள் அரங்கில் இருந்து நேரலை LIVE செய்த பெருமை எனக்குண்டு. ( புதிய தலைமுறை டிவி)
அந்த அனுபவத்தில் சாட்டிலைட் சேனல்களின் குழாயடிச் சண்டை விவாத நிகழ்ச்சிகளை எல்லாம் தூக்கிக் குப்பையில் வீசும் வகையில் யூடியுப் மற்றும் ஃபேஸ்புக் சமூக ஊடகங்களில் நேரலை ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் அவரது இந்த நெறியாளுகை இருந்தது.
வாழ்த்துகள் சகோ. One of the masterpieces show of yours.
– வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்