இலங்கை தேசியக்கொடியில் கால்மிதிப்பு

18

இலங்கை தேசியக்கொடியில் கால்மிதிப்புக்கள், செருப்பு, மலசலகூடவிரிப்பு வெளியிட்ட சீன நிறுவனம்.

உலகின் முன்னணி இணையவழி சில்லறை விற்பனையாளரான அமேசன் நிறுவனத்தின் விற்பனை பட்டியலில் , இலங்கைக் கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிப்புக்கள் உள்ளிட்ட பல தயாரிப்புக்கள் இடம்பெற்றுள்ளது .

அமேசன் இணையத்தளத்தின் விளம்பரத்தின்படி இதன் விலை 12 அமெரிக்க டொலராகும் . இலங்கைக்கு அனுப்ப 9.20 அமெரிக்க டொலர் கப்பல் கட்டணம் வசூலிக்கிறது அமேசன் நிறுவனம் , சிங்கப்பூரிலிருந்து உலகளவில் விரிப்புகளை விநியோகிக்கிறது .

இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திசானநாயக்க , இது இலங்கை சந்தையில் விற்பனைக்கு வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.