இலங்கையில் இன்று ஏற்பட்ட எதிர்பாராத விபத்து…

213

பேருந்து யன்னல் ஓரத்தில் கையை வைத்திருந்தவர் கரம் துண்டாகி ஆற்றில் வீசப்பட்டது !!!!சடுதியாக பேருந்தில் சென்ற சக பிரயாணிகள் இளைஞரின் துண்டான பாகத்தை வைத்தியசாலை கொண்டு சேர்த்து சத்திரசிகிச்சை!!!

பொதுமக்களின் விழிப்புணர்வின் உன்னதமான நடவடிக்கை!!!

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் எமக்கு இரு விடயங்களை தெளிவுபடுத்துகின்றது ,
ஒன்று பேருந்துகளில் செல்லுபவர் காற்று வாங்கும் போது யன்னல் ஓரம் இருப்பது தவறில்லை ஆனால் தங்களது கைகளை யன்னல் வெளிய நீட்டியபடி வருவது ஆபத்து என்பதையும் ஒரு விபத்து ஏற்பட்டு உடல் அவயம் துண்டானால் அதை பாதுகாப்பாக பேணி வைத்தியசாலை கொண்டு சென்றால் அவற்றை சத்திரசிகிச்சை மூலம் பொருத்த வாய்ப்புள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

இரத்தினபுரி கொடகவெலவில் பஸ் விபத்து
அவன் கையை ஜன்னலுக்கு வெளியே பிடித்த ஒரு இளைஞனின் துரதிர்ஷ்டவசமான விதி!

கொடகவேலா பகுதியில் இன்று இலங்கை போக்குவரத்து சபைக்குரிய சேர்ந்த பஸ் ஒன்று தனியார் பேருந்து மீது மோதியது மற்றும் ஒரு தனியார் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து ஜன்னல் மீது கையைப் பிடித்துக் கொண்டிருந்த இளைஞனின் வலது கை அவரது முழங்கைக்கு மேலே பிரிக்கப்பட்டதில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது.

காயப்பட்டவர் இன்று பிற்பகல் கஹவத்த வைத்தியசாக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்க சுமார் 20 நிமிடங்கள் ஆனது அத்துண்டம் நீரோட்டத்தில் தேடி கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காயமடைந்த இளைஞர் அமிதியகொட பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர்.

எதிர்பாராத விபத்தின் போது

உடல் அவயவங்கள் துண்டானால் நாம் செய்ய வேண்டியது!!!

அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக, மருத்துவத்துறை இலங்கையில் முழுமையடையாத போதிலும், இவ்வாறு சத்திரசிக்கிச்சையின் மூலம், முற்றாக துண்டாக்கப்பட்ட அவயவங்களையும் மீளப்பொருத்தகூடியளவில் போதனாவைத்தியசாலைகள் திறன்பெற்றுள்ளன. இவை, சற்று சிக்கலான சத்திரசிகிச்சையாக இருந்தபோதிலும், இதன் பெறுபேறு, வைத்தியசாலைக்கு எடுத்துவர முதல், செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது,
1.துண்டிக்கப்பட்ட பாகத்தை பத்திரமாக சுத்தமான பொலித்தீன் பையினுள் வைத்து, அதனை பனிகட்டிகள் நிரம்பிய பெட்டியில் வைத்து துரிதமாக வைத்தியசாலைக்கு எடுத்துவர வேண்டும். (தாழ் வெப்பநிலை கலஇறப்பை தாமதப்படுத்தும்)

2.மேலதிகமாக அவயவங்களில் என்புமுறிவு இருக்கலாம் என ஊகிக்கும் பட்சத்தில், அந்த பகுதியை அசையாது (immobilization) மர தகட்டினை /பலகையை வைத்து இஸ்திரபடுத்த முடியும்.

3.விபத்துக்குள்ளான நபருக்கு உணவு நீரினை கொடுப்பதை தவிர்ப்பது , நேர விரயமின்றி உடனடியாக பொது மயக்கமருந்து கொடுத்து சத்திரசிகிச்சைக்கு எடுத்து செல்ல வழிவகுக்கும்.

இப்பதிவு, மக்களின் பொது மருத்துவ மற்றும் முதலுதவி அறிவினை மேம்படுத்துவது, வைத்தியர்களின் வினைத்திறனையும், சிறந்த பெறுபேறுகளையும் அடைய வழிவகுக்கும் என்ற தன்னலத்துடன் பதியப்பட்டது .

நன்றி
இலங்கை தாதியர் செய்தி குழுமம்