போலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…

57

#வந்தோரை வாழவைக்கும் வன்னிமண் எங்களையும் வாழ வைக்கும் என்றும வாக்கு பிச்சை கேட்கிறார்கள் இவர்கள் இருவரும்.

அவர்களின் உள் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்…

#வன்னியில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பது நமக்குத் தேவையில்லை நீங்கள் நன்றாக வாழ வேண்டிய தேவையும் நமக்கில்லை.நாம் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.எம்மால் ஒருபோதும் உங்களைப்போல் வாழ முடியாது அப்படி வாழ்வதற்கு பிறந்தவர்கள் நாங்கள் அல்ல அதை முதல் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.ஆகவே வாக்களித்து எம்மை வாழ வையுங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக…..

#இந்த ஒரு பதவியை பெற்றுக் கொள்வதற்காக எந்த அளவிற்கு தான் நாங்கள் கீழே இறங்கி வருவது எமக்கும் கௌரவங்கள் இருக்கின்றன நாங்கள் மிகவும் வசதியாக வாழ்ந்து பழகியவர்கள்.

எந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறோம் புரிந்துகொள்ளுங்கள் தயவுசெய்து….

#எம்மை விட வசதி குறைந்தவர்கள் என்றும் பாராமல் கையெடுத்து கும்பிட வேண்டிய நிலைமையில் நாம்.யாரென்று தெரியாதவர்

ஆனால் காலில் விழ வேண்டிய நிலைமை மனதிற்குள்.கோபத்துடன் பார்ப்பவனுக்கு பற்களைக் காட்டி முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டிய தேவை….

#உங்களிடம் வாக்கை பெறுவதற்கு எத்தனை பொய்கள் சொல்ல வேண்டியிருக்கு உங்களுக்கு தெரியாது அதன் கஷ்டம் இரவு முழுவதும் பொய்களை படித்து உங்கள்முன் கைதட்டல் பெற்று அதை வாக்கா நாம் பெறுவதற்கு படும் பாடு..நம்புகிறோம் வாக்குப் பிச்சை போடுவீர்கள் என்று ஒவ்வொரு தருணத்திலும்….

#கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் தலைவரை நாங்கள் சித்தரித்த விதத்தில் இருந்து மாறுபட்டு அவர்தான் தமிழ் மக்களின் ஒரு தலைவன் அவர் மட்டும்தான் என்று எமது பதவிகளுக்காக எமது தன்மானத்தை விட்டு உங்களிடம் மடிப்பிச்சை கேட்கிறோம்.நிச்சயம் உறுதியாக கூறுகிறோம் எங்களை வெற்றியை அடைய வையுங்கள் முள்ளிவாய்க்காலில் நீங்கள் சந்தித்த அவலத்தை விட அதிகமான அவலத்தை உங்களுக்கு தர மாட்டோம்.ஏதோ எங்களின் அரசியல் இருப்புக்காக குறைந்தபட்சம் உங்களை உயிருடன் ஆவது விட்டு விடுவோம்…….

#ஏற்றுக் கொள்கிறோம் இந்த மண்ணையும் இந்த மக்களை பற்றியும் இந்த மக்களின் கஷ்டங்களையும் பற்றியும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய தேவை எமக்கு இல்லை அதைத் தெரிந்து கொண்டு நாம் எதையும் செய்யப்போவதில்லை.அது நமக்குத் தேவையில்லாத விடயம் நமக்கு தேவையானதை மட்டும்தான் நாங்கள் கேட்போம்.அதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.எத்தனை அவமானங்கள் எத்தனை அவலங்கள் எத்தனை துன்பங்கள் எத்தனை துயரங்கள் சந்தித்தாலும் உங்களிடம் கையேந்தி பிச்சை கேட்கிறோம் கருணை கொள்ளுங்கள் எங்கள் மீதும்….

#ஒரு பதவிக்காக உங்களிடம் வந்து கையேந்தி நிற்பதில் குடும்பத்துக்குள் நடக்கும் சில விஷயங்களை கூட நாங்கள் பொது வெளியில் சொல்ல முடியாத நிலைமையில் தான் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறோம்.எங்களின் மனங்களையும் புரிந்து கொள்ளுங்கள்.

வந்தால் பாராளுமன்ற உறுப்பினராக வா இல்லையென்றால் வீட்டின் கதவைதிறக்காத என்று மனைவி சொல்கிறார் வீட்டுக்குச் செல்லும் பொழுது இப்படியான நிலைமையில் இருக்கிறோம். இதை விட நாங்கள் உங்களுக்கு தெளிவாக புரிய வைக்க முடியாது புரிந்துகொள்வீர்கள் குடும்பத் தலைவர்களே….

#நீங்களே ஒரு தடவைக்கு பத்து தடவை சிந்தியுங்கள்.நாம் வாக்கு கேட்பதில் என்ன தவறு இருக்கு எங்களிடம்.இதுவரை நீங்கள் வாக்களித்து எண்ணத்தை கண்டீர்கள் உங்களுக்கு என்ன கிடைத்தது எதுவுமில்லை.அப்படியானவர்களுக்கு வாக்களிக்கும் போது எதுவுமே செய்ய நினைக்காத எங்களுக்கும் வாக்களிக்கலாம் தானே.நாமும் அவர்களைப் போல் வாழ நினைப்பதில் என்ன தவறு காரணம் நாம் வசதியாக வாழ்ந்து பழகியவர்கள் அதைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் எங்களின் வாழ்வை கருத்தில் கொண்டு.எங்களையும் உங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக நினைத்துக் கொள்ளுங்கள்.நிச்சயமாக அவர்களை போல் நாங்களும் எதுவும் செய்ய மாட்டோம் அதை நிச்சயம் உங்களுக்காக கடைபிடிப்போம் அதற்கு உத்தரவாதம் தருகிறோம் உறுதியாக…..

#ஆகவே எமது சில நிலைப்பாட்டை மட்டும்தான் இங்கே உங்களிடம் வைத்திருக்கிறோம்.இதைவிட இன்னும் அதிகமாகவே இருக்கிறது எமது சிந்தனைகள்.ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறோம் எதற்கும் பயன்படாத ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதாக இருந்தால் நிச்சயம் அந்தப் பட்டியலில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம் அதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்…

#கடந்த காலங்களில் எதற்கும் பயன்படாத பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து வரலாற்றைப் படைத்த எமது இனம் என்பதை நினைவில் வைத்து அந்த வரலாற்றை மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் உங்களுக்கு உறுதியான அதே பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்றால் நிச்சயம் உங்கள் வாக்குகள் எங்களை நோக்கித் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம்…

#எங்களது வாக்குப் பிச்சை சரி என்று பட்டால் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள்….

அன்புடன்

அரசியல் சாணக்கியன்…

மாணிக்கம் சின்னதம்பி