நாடு முழுதும் தேர்தல் மோசடிகள்,அஞ்சு பத்துக்கு விலைபோன அரச அதிகாரிகள்…

196

தனது விருப்பு வாக்குகள் சுமந்திரனுக்காக மோசடி செய்யப்பட்டதாக சசிகலா ரவிராஜ் கூறினார்.

சசிகலா ரவிராஜ் அரசியலுக்கு புதிது. அவருக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரங்கள் தெரியாது என்று சுமந்திரன் நக்கலாக கூறினார்.

இப்போது தோழர் செந்தில்வேல் அவர்கள் தமது சுயேட்சைக் குழுவின் வாக்குகள் மோசடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தோழர் செந்தில்வேல் அரசியலுக்கு புதிது என்று சுமந்திரனால் கூறமுடியாது. ஏனெனில் அவர் சுமந்திரனைவிட அதிகளவான தேர்தல் அனுபவங்களைக் கொண்டிருப்பவர்.

தேர்தலில் மோசடி செய்ய முடியாது என்று சுமந்திரனின் விசுவாசிகள் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், “இம்முறை தேர்தலில் தெளிவான தேர்தல் மோசடி நடந்துள்ளது” என்று ஐக்கியதேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமா கூறியுள்ளார்.

வழக்கமாக லட்சக்கணக்கில் விருப்பு வாக்கு பெற்றுவந்த தனக்கு இம் முறை கிடைத்த விருப்பு வாக்கு மோசடி நடந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் அவர்.

இவை எல்லாவற்றையும்விட கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அவர்கள் “ விகிதாசார தேர்தல் முறைமையில் எந்தவொரு ஆசனமும் இன்றி ஜதேக கட்சி தோல்வியுற்றது என்பது ஆச்சரியமளிக்கிறது” என்று கூறுகிறார்.

இவ்வாறு சிங்கள பகுதிகளில்கூட தேர்தல் மோசடி பற்றிய குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் எழுகின்றன.

ஆனால், கள்ள வோட்டு போடுவது மட்டும்தான் தேர்தல் மோசடி என்று நம்புகின்ற ஒரு முட்டாள் கூட்டம் எமக்கு போதிக்கிறது தேர்தலில் மோசடிகள் செய்ய முடியாது என்று.

பாலன் தோழர்