இரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா?

87

மினேரியா தேசிய பூங்காவில் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்ற சம்பவம் இலங்கையில் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இது ஒரு அரிய மற்றும் அபசகுனமான ஒன்று என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டை குட்டிகளை யானை போடுவது ஜோதிட ரீதியாக அரசியல்தலைவர்கள்,நாட்டுக்கு கெட்ட சகுனமாக பார்க்கப்படுவது வழமை,சிறிலங்கா ஏற்கனவே அதளபாதாளத்தினுள் புதைந்து கிடக்கின்றது.இதில் இந்த யானை வேற இரட்டை குட்டிகளை போட்டுள்ளது.

அரச சிஸ்டத்தையும் வேலைகளையும் நம்பி கொரானாவினால் காசு இருந்தும் பல்லாயிரம் மக்கள் கொலைபட்டினி இருக்க,மற்றைய உயிரினங்கள் காசு கட்டாமல் பூமியில் இயற்கையுடன் பூமியில் சந்தோசமாக வாழ்கின்றன.இந்த மக்களை அரச சிஷ்டம் இஷ்டத்துக்கு கெடுப்பதுடன்,கெடு மக்கள் ஈற்றில் அரசை சிஷ்டத்தை கெடுத்து குட்டி சுவராக்கிவிடுகிறார்கள்,இடையில் யானை இரட்டை குட்டி போட்டதால் நாட்டுக்கு அபசகுனம் என்கிறார்கள்,ஏதோ நாடு இதற்கு முதலில் நல்லா இருந்த மாதிரி…