கேரளாவில் யானைக்கு வெடி,மனித மிருகங்களின் ஈன செயல்

75

கேரளாவில் கர்ப்பமான பெண் யானையை அன்னாசி பழத்தில் குண்டை வைத்து உண்ண கொடுத்து,பின்னர் குண்டு வெடித்து தள்ளாடி அந்த யானை இறந்துள்ளது.நீரினுள் சிறுது நேரம் தள்ளாடிய படியே நின்று கொண்டிருந்த பின்னர் காயம் வெடி குண்டால் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்துள்ளது.அதன் கருவில் அதன் சிறிய யானை குட்டி இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதே வேளை இந்த நாசகார வேலையை செய்தவர்களை தேடி கேரளா காவல்துறை வலைவிரித்துள்ளது.சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரானா எல்லாம் மிகப்பெரிய அழிவு என கதறும் மக்கள்,அதை விட கொடுமையான இந்த ஈனசெயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க முன்வரவேண்டும்.