மூலக்கூறில் பிறழ்வு ஏற்பட்ட (மாற்றமடைந்த) கோவிட் வைரஸ் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சில பாகங்களில் வைரஸ் அதிகளவில் விருத்தி அடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் 60 உள்ளுர் பிராந்தியங்களில் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட புதிய வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது மோசமான நோயை ஏற்படுத்தும் என்றோ தடுப்பூசிகள் நீண்ட காலம் செயற்படாது என்ற பரிந்துரை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் மெட் ஹென்கொக் தெரிவித்துள்ளார்.
லண்டன் கென்ட் எசெக்ஸ் மற்றும் ஹேர்ட்போர்ஷயர் போன்ற பகுதிகளில் கடந்த வாரம் தொற்று அதிகரித்திருந்ததாக சபையில் ஹென்கொக் தெரிவித்துள்ளார்.
தென் இங்கிலாந்தின் பகுதியில் வித்தியாசமான வைரஸ் தொற்றுடன் ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய கொரோனா வைரஸ் பரிசோதனை மூலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸை கண்டுபிடிக்க முடியும் என்று இங்கிலாந்து பிரதம மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.
மாற்றங்கள்ள அல்லது பிறழ்வுகள் வைரஸின் புரதத்தை அதிகரிக்கச் செய்யும்.இந்த பகுதி தொற்றுக்குள்ளான செல்களுக்கு உதவும்.
உண்மையில் இந்த வைரஸ் எவ்வாறு செயற்படும் என்பது குறித்து விரைவில் அறிந்துக்கொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது அதிக ஆபத்தானதோ அல்லது தொற்றுக்குள்ளாகுமோ என்று அஞ்சத்தேவையில்லை என்று பேர்மிங்ஹம் பல்லைக்கழகத்தின் பேராசிரியர் அலன் மெக்நலி தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இது குறித்து அவதானததுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவதானமாகவும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வெல்கம் பணிப்பாளர் வைத்தியர் ஜெரமி பரார் தெரிவித்துள்ளார்.
-ஈழம் ரஞ்சன்-