“நீ ஒரு இளம் பெண்”. நான் ஒரு பெண். என்னுடைய 12 வயதில்,
அவர்கள் என் அடையாளத்தைத் தேர்ந்தெடுப்பதை அனுமதித்ததன் மூலம் கடினமான வழியைக் கற்றுக்கொண்டேன், இந்த கொடூரமான மனிதர்களை நான் திருப்திப்படுத்துகிறேன்.
ஆனால், இப்பொழுது நான் பரந்த ஒரு புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு , கடந்த காலத்தை நினைத்து, என் பற்களுக்கு இடையில் ஒரு சயனைட் குப்பியை வைத்திருக்கும் காரணம் என்ன என்பதை நினைத்துக் கொண்டேன் .
“இந்த போரில் நீ சண்டை இடுவதற்கு தகுதி அற்றவள்.” என்னால் ஏன் முடியாது? போராளிகள் இரத்தம் சிந்துவதை என் கண்ணால் கண்டேன், உங்களின் வாழ்நாளில் சிந்தியதைக் காட்டிலும், அதிகமான இரத்தம், வியர்வை, கண்ணீர் ஆகியவற்றை நான் சிந்தினேன். அங்கு நான் நரகத்தின் இசையைக் கேட்டேன்.
ஒரு தாய் தன் எரிந்த குழந்தையின் உடலில் விழுந்து அழுகிறாள்; ஒரு இளம் பெண்ணும் அவள் தம்பியும் இறந்துபோன தங்களின் தாய் தந்தையரின் பிரேதத்தினை கட்டி அனைத்து அழுகின்றார்கள். எரிந்து கிடக்கும் தன் மக்களின் உடல்களைப் பார்க்கும் எவனுக்கும் தன் தாய்நாட்டை மீட்டெடுக்க போராடுவதற்கான உரிமை உண்டு.
நீ அவர்களைக் கைவிடுவதன் மூலம் உன் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றாய். நான் என் சொந்த விடுதலைப் போரை தேர்ந்தெடுப்பதன் மூலம் என் குடும்பத்திற்கும், ஏதிலிகள், விதவைகள் மற்றும் தம் கண்களை இழந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கின்றேன்
போராடி இறுதியில் வெல்வோம் என்ற நம்பிக்கையில் என்னை சுற்றி ஒருமுறை பார்க்கும்போது,ஒரு குழந்தை சிரிப்பதையும், மூன்று வருடங்களுக்குப்பின் என் சீருடையில் என்னைப் பார்க்கும் அம்மாவிற்கு நான் அவருடன் வரமாட்டேன் என்று தெரிந்திருந்தும் பெருமையோடு அவரின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது.
“நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள்; நீங்கள் எளிதாக காயப்படுத்தப் படுவீர்கள். “ஏற்கனவே நான் காயப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? கிழிந்து தொங்கும் எனது சீருடையை பிடித்துக்கொண்டு,”அக்கா, அக்கா! என் அம்மாவைக் கொண்டு வாருங்கள்!” என்று ஓலமிடும் ஒரு பெண் குழந்தையின் அழுகுரல் காற்று வெளியை நிரப்பிக்கொண்டிருந்தது. இறந்தவர்களின் உடலையே தங்களின் உடையாக அணிந்து கொண்ட இராட்சத மிருகங்கள் கொடூரமாக சிரித்துக் கொண்டே என்னுடைய சகோதரிகளின் கூந்தலை பற்றி இழுத்துக்கொண்டு செல்வதைப் பார்த்து நான் ஒரு மிருகமாக மாறினேன். அந்த கொடூர மிருகங்கள் என்னுடை ஒரு சிறிய சகோதரியின் பிணத்தின் ஆடைகளை களைவதைக் கண்டபோது என் கண்கள் கோபத்தில் இரத்த சிவப்பாக மாறியது. சித்திரவதைக்கு உள்ளானபோது உண்டான அடையாளங்கள் எனது உடலில் இருந்தாலும், நான் அவற்றைப் பற்றிக் கவலைபடாமல் எனது உடலிலுள்ள போரின் வடுக்களை பார்த்து மிகப் பெருமை அடைந்தேன், நான் மரணத்தை வெற்றி கொண்டேன். அவர்கள் என்னை முறியடிக்க முடியாது; என்னை என்றும் முறியடிக்க முடியாது.
“அக்கா, எனக்குப் பயமாக இருக்கின்றது.” நீ பயப்பட வேண்டாம். நாம் வெற்றியின் விளிம்பில் நிற்கின்றோம். இறுதியில் எமது அழகிய தமிழீழத்தை அடைவோம், எமக்குரிய மகிழ்ச்சியை மீண்டும் பெறுவோம். சண்டையை நிறுத்த மாட்டோம்.
நீ ஒரு பெண்! ஒரு குழந்தை என்று அவர்கள் கூறும் போது, அவர்களின் கண்களைப் பார்த்து சொல்; நான் ஒரு பெண்; எமக்கு நடந்த அநியாயங்களைப் பார்த்தபின்தான் போராட வந்தேன். நரகத்தின் இசையைக் கேட்டேன்-என் குடும்பத்தை மட்டுமல்ல-முழு தமிழீழத்தையும் நான் காப்பாற்ற வேண்டும்- பெருமையாக இருக்கின்றது.என் மக்களுக்கு நல்லதொரு வாழ்வைக் கொடுக்கக் போகின்றேன்.என் விழுப்புண்களைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது,ஏனெனில் அவர்கள் என்னை என்றுமே முறியடிக்க முடியாது.நான் ஒரு போராளி, வெற்றியின் தீபத்தை என் கையில் ஏந்தியுள்ளேன்- நான் நல்ல ஒரு எதிர்காலமாவேன்.
எழுத்து ~ஷாருதி ரமேஷ்
(தமிழீழத்தின் விடுதலைக்காக மாவீரர்களாக மாண்டுபோன தமிழீழ விடுதலைப் பெண்போராளிகளின் தியாகங்களைப் போற்றும், செல்வி ‘சாருதி ரமேஸ்’ன் வரிகள்)