இருந்தும் இனமானம் பற்றிப் பேச இவருக்கு இருக்கும் அடிப்படைத் தகுதி என்ன?
செம்மணியில் கொன்று புதைத்த
எத்தனை தமிழ்க் கண்மணிகள்!
ஒன்றாய் நின்று உண்டு
உறங்கியவரையெல்லாம்
கண்டும் காணதவராய் எதிரியோடு
கொஞ்சிக்குலவி கூடிநின்று
காட்டிக்கொடுத்த ஒரு கேடி
இந்த டக்ளஸ் தாடி மாமா!
தமிழர்களின் தலைகளை கொய்து
வீணை மீட்டி சாவுகானம் பாடிய
கொடிய இராட்சதன் இவன்!
தையல் இயந்திரங்களையும்
மீன்பிடி உபகரணங்களையும்
கொடுத்து அப்பாவி மக்களின்
கண்களைக் கட்டி விட்டு நான்
அரசியல் செய்கிறேன் என்று
தீவகங்களில் வாழ்ந்த பலநூறு
தமிழ்ப் பெண்களின் தாலியறுத்த
வரலாறுகள் எல்லம் மறந்துபோச்சா?
கட்டியிருக்கும் வெள்ளை வேட்டி உமக்கு
வேண்டுமானல் வெண்மையாயிருக்கலாம்
அனால் எங்களின் கண்களுக்கு எப்பவுமே
இரத்தக் கறை படிந்த சிவப்பு நிறம்தான்!
அண்ணன் திலீபன் உண்ணவிரதமிருந்த
அந்தக் கதிரையின் காலய் இருக்கக் கூட
தகுதியிலாதது உனது அரசியல்தனம்!
ஆனால் அதற்குள் ஆயிரம் ஜகத்தாளம்!
ஈழவரலாற்றில் எப்பவும் நீ எங்களுக்கு
தேசத்துரோகி காக்கை வன்னியன் தான்
இதில் எந்தக் காலமும் மாற்றமில்லை!
நீ பாடைக்கு போகுமுன்னர் இருந்துபார்
எங்கள் மறவர்படை ஓர் நாள் தமிழீழமாளும்!
பெற்ற தாயை விற்றுக் காசு பிழைக்கும் பேர்வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வ்ழி
அற்புதங்கள் நாளை தமிழீழம் காணுவார் எம்
அண்ணன் வந்து உங்களுக்கு தீர்ப்புக் கூறுவார்!
கதிா் ஈழம்