எண்பதுகளில்…!

80

•என்ர மூத்தவன் புளட்டில, நடுவிலான் டெலோவிலே, கடைக்குட்டி #புலியில என்று பெருமைப்பட்ட தாய்மார்,

•அயல்வீட்டு என்ஜினியர் மகன் ஈ.பி.ஆர்.எல்.எவ்,

•முன்வீட்டு வாத்தியார் மகன் ஈரோஸ் என்று இறுமாந்திருந்தோம்!

•கோட்டையில் சைரன் ஊதி அனைவரையும் காத்த புளொட்,

•ஆண்களும் பெண்களுமாய் செங்கொடிகள் கட்டிய அழகிய ஈ.பி.ஆர்.எல்.எவ்,

•அறிவாளிகள் என்று போற்றப்பட்ட ஈரோஸ்,

•வீரத்துடன் திகழ்ந்த ரெலோஸ்டுகள்,

•கட்டுக்கோப்பான ஒழுக்கமான சறம் கட்டிய வீரர்களாய் திகழ்ந்த #விடுதலைப்_புலிகள்!

எதிரியைக்கண்டால் இயக்க பேதம் மறந்து எதிரியுடன் சண்டையிட்ட நெஞ்சுறுதி மிக்கபோராளிகள்,

எங்கிருந்து நஞ்சு வந்தது?

வெளியுலக சக்திகளின் சதி வலைக்குள் விழாமல் நான் பெரிது நீ பெரிது என்று எண்ணாமல் தமிழ் ஈழம் பெரிது தம்மை கொண்டாடிய தமிழ் மக்கள் பெரிது என்று சம்மந்தப்பட்டவர்கள் எண்ணி இருந்தால் நிச்சாயமாக தமிழர்களாகிய நாம் இன்று நடுத்தெருவில் நின்றிருக்கமாட்டோம்..,