இன்று நள்ளிரவு முதல் உள்ளிருப்பு

12

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உள்ளிருப்பு அறிவிக்கப்பட்ட 19 மாவட்டங்களிலும் கடுமையான சோதனைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஒருவார காலமாக 16 மாவட்டங்களில் உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளிருப்பு நடைமுறைக்கு வருகின்றது.

இந்த 19 மாவட்டங்களிலும் மிக கடுமையான சோதனை இடம்பெறும் எனவும் இதற்காக காவல்துறையினர் மேலதிகமாக கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் ,சோதனைச் சாவடிகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் இதற்காக 90.000 காவல்துறையினர் மேலதிகமாக பணியில் ஈடுபடுவார்கள் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.