எரிக்சொல்ஹெய்ம் எனும் ஏவல் பேய்!

189

தமிழர் மீதான இனப்படுகொலைக்கு, சிங்களத்திற்கு,

சேர்ந்தே ஆயுத உதவு வழங்கினார்கள்,

சேர்ந்தே பண உதவி வழங்கினார்கள்,

சேர்ந்தே தொழில்நுட்ப உதவி வழங்கினார்கள்,

சேர்ந்தே புலனாய்வு தகவல்களை வழங்கினார்கள்,

சேர்ந்தே இலங்கை படைகளுக்கு பயிற்சிகளும் வழங்கினார்கள்,

புலிகளை அழித்து விட்டு சிங்களவர்களை கையாளலாம் என்று மேற்குலகும், இந்தியாவும் போட்ட திட்டம் தவிடுபொடி ஆகிய பின்னர்,

இப்பொழுது புலம்புகிறார்கள்…..

எரிக் சொல்கெய்ம்மின் புலம்பல்…..

மற்றவர்களை குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டுமாம், ஈழத்தமிழர்கள் ஈழம் அமைக்கும் முயற்சிக்கு எந்த ஒரு நாடும் ஆதரவு இல்லையாம், ஏன் சிங்களவர்கள், முஸ்லீம்கள் கூட ஆதரவில்லையாம், இதனால் ஈழம் அமைக்கும் கனவு கடினமானதாகும், சமஸ்டி முறைமை ஒன்றுக்குள் போவதற்கு முயற்சிக்க வேண்டுமாம்!!??

கூர்ந்து கவனித்து பார்த்தால் இதையும் உள்ளூரில் பல ஈழத்து தமிழ் அரசியல்வாதிகள் சொல்லி கொண்டும்தான் உள்ளனர்.அவர்கள் தொடர்பில் யாரும் கரிசனை கொள்வதாக கூட இல்லை.எனினும் அவர்கள் அனைவருமே குறிப்பிட்ட புள்ளிகளில் ஒன்றிணைவதே பார்க்கும் போதே 2009 இறுதிகட்ட போர் அரங்கின் பின்னால் நிகழத்தப்பட்ட மாபெரும் உள்நாட்டு + வெளிநாட்டு துரோகங்களை அறிந்துகொள்ளமுடியும்.வரலாற்றை வழிகாட்டியாக ஏற்றவன் இன்று வரலாற்றுக்கே வழிகாட்டியாகிவிட்டான்.வரலாறு இவர்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.இனி அது இவர்களை பார்த்துகொள்ளும் நாம் வேடிக்கை மட்டும் பார்த்துகொள்வோம்!