எதைத் திருடுவது என்ற வரமுறை இல்லையா? Montgeron (Essonne) நகரில் சம்பவம்..

143

தீயணைப்பு படையினர் மீட்புப்பணி ஒன்றில் ஈடுபட்டிக்கொண்டிருக்கும் போது அவர்களது வாகனம் திருடப்பட்டுள்ளது.

Montgeron (Essonne) நகரில் இச்சம்பவம் (05/10/2020) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மாலை நான்கு மணியளவில் அங்குள்ள Avenue de la République வீதியில் வாகனம் விபத்து ஒன்று இடம்பெற்றது. விபத்தை அடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவி வழங்கிக்கொண்டிருந்தனர்.

அதன் போது எதிர்பாராத நிகழ்வாக, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தீயணைப்பு படையினரின் வாகனத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.

தீயணைப்பு படையினர் காவல்துறையினரை அழைத்துள்ளனர். சில மணிநேரம் கழித்து வாகனம் மீட்கப்பட்டதோடு, திருடிய நபரும் கைது செய்யப்பட்டார்.