புறக்கணித்து வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய காவல்துறை

58

உங்கள் பார்வையில் சிறந்த அரசியல் எது?

View Results

Loading ... Loading ...

காவல்துறையில் இருப்பவர்களுக்கு கிரீடம் கொடுக்கப்படவில்லை. ஆணவமும் ஏளனமும் எகிறிப்போய் இருக்கிறது உங்களுக்கு.

எங்களை பாதுகாக்கும் பணிதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் சேவை என்றுதான் குறிப்பிடுவார்கள்.

தந்தை கண்ணெதிரே மகனையும், மகன் கண்ணெதிரே தந்தையையும் சித்தரவதை செய்தே வதைத்துள்ளீர்கள். நீங்கள் வதைத்தவர்கள் குற்றமற்றவர்கள். திருடர்களோ கொலைகாரர்களோ கிடையாது.

இந்த கொடூரத்திற்கு கோபப்பட்டாலும் அழுதாலும் இறுதியில் இயலாமையில் தான் மனம் மரத்துப்போகிறது. மக்கள் குரலெழுப்பலாம் போராடலாம். ஆனால் எதுவும் இதற்கு நீதி ஆகாது. எதைக்கொண்டும் இதை நியாயப்படுத்த முடியாது. வருங்காலத்திலும் காவலர்களின் ஆணவமும் திமிரும் சற்றும் குறையப்போவதில்லை.

யாரோ இரு காவலர்கள்(?) செய்த தவறுக்கு அனைத்து காவலர்களையும் குறை கூற கூடாது. காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணவும் முடியவில்லை.

தந்தை காய்ச்சலால் இறந்ததாகவும், மகன் இருதயக் கோளாறால் இறந்ததாகவும் சொல்லி கொலைகாரர்களை காப்பாற்றத்துடிக்கும் காவல்துறையில் மனிதர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. யாரேனும் இருந்தால் நீங்களும், நீங்களாகவே இதை எதிர்த்து குரலெழுப்ப வேண்டும். ஏனென்றால் இது உங்களை நீங்களே காரித்துப்பிக்கொள்ள வேண்டிய கேவலமான செயல்.

#PoliceBrutality

நன்றி – சிவசங்கரி