தூத்துக்குடி அருகே நடந்த சோகமான சம்பவம்…
தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தில், திரு.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சேர்ந்து கைபேசி விற்பனையகம் நடத்தி வந்தார்கள். கொரோனா கட்டுப்பாடு சமயத்தில், தங்கள் கடையை இரவு 8 மணிக்கு மேல் திறந்து வைத்ததாக காவல்துறை குற்றம் சாட்டி தந்தை ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள். இதனை தொடர்ந்து திரு. ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளார். இதனால் கோபமடைந்த காவல்நிலைய எஸ்ஐக்கள் அவரது கண் முன்னாலேயே, அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை தடுக்க கேள்வி கேட்ட பெனிக்ஸையும் பலமாக அடித்து, இருவரையும் இரவோடு இரவாக கோவில்பட்டி சிறை சாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சம்பந்தமேயில்லாமல் கோவில்பட்டி சிறைச்சாலைக்கு ஏன் அனுப்பினார்கள் என்ற கேள்விக்கு பதில் தெரியாத நிலையில் இன்று காலை தந்தை மகன் இருவரும் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர் 🙁
இதனை அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அனைவரும் போராட்டம் செய்ய ஆரம்பித்தவுடன், வழக்கம் போல இரண்டு காவல்துறை அதிகாரிகளை ஆயுத படைக்கு மாற்றம் செய்து ‘மிக கடுமையான தண்டனையை’ உடனடியாக வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக காவல்துறை 🙁
ஏற்கனவே கொரோனாவால் ஏகப்பட்ட சிரமங்களில் தவிக்கும் மக்களுக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிறது.தூத்துகுடியில் ஸ்டைலர்ட் போராட்டத்தில் கொல்லப்பட்ட 13 தமிழர்களுக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை.இதை இப்படியே விட்டால்,இது தொடரதான் போகின்றது.இதனால் இதை இப்படியே விடும் மக்களைதான் அது பாதிக்க போகின்றது.இன்று இவர்கள் நாளை நீங்கள்,எனவே இன்றே காவல்துறையை புறக்கணிக்க தொடங்குங்கள்,மாமுல் வேட்டை நடத்தி கொழுத்த ஏவல்துறை இனி திருந்தும் என்றும் எதிர்பார்ப்பது வேலைக்கு ஆகாது.எனவே அந்த அரசும் அதன் ஏவல் துறையையும் முற்றாக புறக்கணித்து சமூகத்தில் இருந்து ஒதுக்குங்கள்,இல்லாம் இதைனையும் பத்தோடு பதினொன்றாக கடந்து போவதாக இருந்தால்,நீங்களே முதலில் செத்து ஒழிந்து போங்கள்,நீங்கள் செத்து ஒழியும் போதே,அந்த ஏவல்துறைகளும் அவர்கள் ஏவல் அரசுகளும் செத்து போய் தொலையும்.தூத்துகுடியில் கொலையில் பங்கு கொண்ட திமுகவுக்கே மீண்டும் ஓட்டு போட்ட அன்றே நீங்கள் ஊரோடு செத்தொழிந்து போயிருக்கலாம்.இனி ஒவ்வொன்றாக இருந்து அழிகிறீர்கள்.தூத்துகுடி உப்புக்கு இருந்த மரியாதை உங்களால் இல்லாம போக போகின்றது.
ஏவல் துறையினால் கொடுராமாக கொல்லப்பட்டவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.