JEE & NEET not to be postponed – Centre
US ல கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி லாக்டவுன தளரத்துனாங்க. அப்போ மறுபடியும் Schools எல்லாம் reopen பன்னாங்க. அந்த School போன students னால மட்டுமே 97000 cases பதிவாச்சு.
இப்போ இந்தியாவிலேயே மிகப்பெரிய என்ஜினியரிங் மற்றும் மருத்துவ தேர்வான JEE மற்றும் நீட் நடக்கவிருக்கு.
இதுல Jee தேர்வை 11 இலட்சம் மாணவர்களும், நீட் தேர்வை 17 இலட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்.
இதுல Agriculture உம் UG க்கான நுழைவு தேர்வு நடத்தப்படும்னு அறிவிச்சிருக்காங்க.
இதிலிருந்து மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை காட்டும் அரசு, அவர்களின் உயிர்களின் மீது அக்கறை காட்டவில்லை என்பது தெள்ளத்தெளிவாக புலனாகிறது.
இவ்ளோ பெரிய examination conduct பன்றாங்க. Safety measures லாம் கடைபிடிக்காமலா இருப்பாங்க. என்ன ப்ரோ சொல்றிங்க?
சமீபத்தில Karnataka மாநிலத்தில COMEDK என்னும் தேர்வு நடத்தினாங்க, கேரளால KEAM என்னும் தேர்வும் நடத்தினாங்க. அதில அவங்க கடைபிடிச்ச safety measures ah பாருங்க தெரியும்.
இந்த தேர்வுகளால நிறைய தொற்று ஏற்பட்டது. சரி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்னே வச்சிப்போம். US மாதிரியில்ல இந்தியா. அங்கே இருக்க பெரும்பான்மையான மக்கள் Nuclear family ( தனிகுடித்தனம் ) ஆக வாழ்பவர்கள். ஆனால் இந்தியாவிலோ 80℅ மக்கள் கூட்டுகுடும்பமாக ( joint family ) தான் வாழ்கிறார்கள். 90% மக்கள் வீட்டில் கண்டிப்பாக ஒரு தாத்தாவோ பாட்டியோ இருப்பாங்க. மாணவர்கள்க்கு ஏற்பட்ட தொற்று asymptomatic ஆக இருக்கும்பட்சத்தில் அவர்களின் வீட்டிலுள்ள முதியவர்களுக்கு இவர்கள் பரப்பமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
கொரோனா தொற்றை தொடர்ந்து பிஹார், அஸ்ஸாம், உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளம் வேற பல மக்களின் வாழ்வாதாரங்களை பிடுங்கிவிட்டு சென்றுள்ளது. இந்த நேரத்தில அவங்களுக்கு ஒரு exam வச்சா, அவங்க அதை 100 கிமீ பயணம் செய்து எழுதக்கூடிய நிலையில் இருப்பாங்களா?
இதெல்லாம் பத்தாது னு UGC வேற இறுதியாண்டு தேர்வை நடத்த வேண்டும் னு கங்கணம் கட்டிட்டு மாநில அரசோட சண்டை பிடித்து கொண்டிருக்கிறது.
அந்தந்த மாநிலத்தில் எவ்வளவு தொற்று உள்ளது. தேர்வு நடத்தலாமா வேண்டாமா?
னு அந்தந்த மாநில அரசையே கண்காணிக்க சொல்லி, assess செய்ய சொல்லி தேர்வு நடத்த சொல்வதே உகந்தது.
உதாரணத்திற்கு எல்லா கல்லூரியிலும் September குள்ள தேர்வு நடத்துவதை விட மஹாராஷ்டிரா தமிழ்நாடு போன்ற தொற்று அதிகமுள்ள மாநிலங்களை இப்போது ஒதுக்கிவிட்டு அருணாசலப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற தொற்று கம்மியாக உள்ள மாநிலங்களில் சிறந்த கண்காணிப்போடு பாதுக்காப்போடு தேர்வு நடத்தி முடிக்கலாம்.
தேர்வை ஒத்திவைப்பதால் மாணவர்களின் ஓராண்டு கல்வி பாதிக்கபடாதா னு supreme court கேக்குறாங்க.
சரி. இப்போ September ல தேர்வு நடத்தின உடனே October லயா நீங்க Counselling வச்சு Admission போட்டு, காலேஜ்ல பாடம் நடத்த போறிங்க. எப்படியும் ஜனவரி, பிப்ரவரி போல தான் அடுத்த கல்வியாண்டை தொடங்க போறிங்க. இப்போ இந்த அசாதாரணமான சூழலில தேர்வு நடத்திறத விட, பின்னாள்ல சாதாரணமான சூழலில அழகா தேர்வு நடத்தி முடிக்கலாமே.
நம்ம உயிரை விட தேர்வு முக்கியமில்ல என்பதை எல்லாரும் புரிஞ்சிக்கனும். இதனால ஒரு மாணவன் மரணித்தாலும் அது இழப்பு தான். ஒரு இலட்சம் மாணவர்கள் மரணித்தாலும் அது இழப்பு தான். இதெல்லாம் நடந்த பின்பு வருத்தப்பட்டு எதும் ஆகபோறதில்ல. போன உயிர் என்றைக்குமே திரும்ப வரப்போவதில்ல. ஆனா அதை தடுக்க முடியுமென்றால் அதை செய்வோமே.
எது எதுக்கோ Twitter ல trend பன்றோம், பல வருசத்துக்கு பின்னாடி நடக்கபோகும் பிரச்சனையை ஆராய்ந்து Eia draft க்கு எதிராக மெயில் அனுப்புகிறோம். இப்போ கண்முன்னே இருக்கும் இந்த விடயத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்போம்.
இறுதியாக தேர்வு நடத்தி தான் ஆவேனு நிக்கிற NTA விற்கும் UGC க்கும் Supreme Court க்கும் என் தனிப்பட்ட வேண்டுகோள்.
எங்க எல்லாத்துக்கும் ஒரு Private Jet அனுப்புங்க. நாங்க NEET க்கு Centre eh போடாத நாகர்கோவில்ல இருந்து கோயம்புத்தூர் போய் எழுதிட்டு வந்தரோம்.
அப்படியே தேர்வு எழுதி முடிச்சோனே எல்லாத்துக்கும் இலவச COVID test எடுக்குமாறு கனம் கோர்டாரை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
நன்றி🙏💕