
யாழ்.கோட்டையிலிருந்து மண்டைதீவுச் சந்தி வரையான இரண்டு கிலோமீற்றர் பகுதியை மாலை நேர உடற்பயிற்சிப் பிரதேசமாக பேணுவதற்கு யாழ்.மாநகர சபை அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பெரும் பாலான இளைஞர்கள் உடற்பயிற்சியினை மேற்கொள்ளுதல் வேண்டும்.அதேவேளை பல வயதானவர்களும், சிறுவர்களும் நடையிலும், ஓட்டத்திலும் பயிற்சியினை மேற்கொள்ளும் வேளையில் சில இளைஞர்கள் அப்பகுதியில் அமர்ந்திருந்து பொழுது போக்குவதைத் தவிர்த்து மாலை நேர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவாக உந்துருளியில் பயணிக்கும் ஆசையும் நின்று விடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார் .
நன்றி வைத்தியர் சத்தியமூர்த்தி