உலகின் மிக ஆபத்தான விஷயம் எது வென்றாலும், அதே அளவு மிக அழகான விஷயம் எதுவென்றாலும் பெண்களின் கண்கள் என்பார்கள்
அதனை “வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று” என்பார் பட்டினத்தார்
“கண்டார் உயிர் உண்ணும் கண்கள்” என்பார் வள்ளுவர்
“அழகிய கண்களை ரசிப்பதாலும், அழகிய கண்களுடைய பெண்களை வர்ணிப்பதாலும்தான் நான் என் பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டேன், ஆம் நான் பெண்களின் கண்ணுக்கு அடிமை” என்றார் கண்ணதாசன்
“பெண்ணின் கண்ணை நோக்காதே, பெண்ணின் கண்ணில் இருந்து உன் கண்ணை திருப்பி கொள்” என உரக்க சொன்னது யூதமொழி
இதற்கெல்லாம் இவ்வளவு காலமும் பொருள் தெரியாமல் இருந்தது, கொரோனா காலத்தில் முகத்தை மூடி கண்கள் மட்டும் காட்டிவரும் மங்கையரை கண்டால் அதற்கான அர்த்தம் உடனே விளங்குகின்றது.
கடந்து செல்லும் பெண்களில் கண்கள் மட்டும் தனியாக தெரிவது மிக மிக அழகான காட்சி, உலகின் அற்புதமான காட்சி
சில கண்களெல்லாம் அப்படியே ஈர்க்கும் வலுவானவை, சில மான் கண்போல் மருண்டவை, சில சோகமானவை, சில குறும்பானவை, சில கண்கள் வசீகரமானவை, சில கண்கள் மகா போதையானவை..
இழவு கொரோனா கண்வழி பரவும் நோயாக வந்து தொலைத்திருக்கலாம்..
நன்றி – Stanly Rajan