இறுதி போரில் காணாமல் போன மகனை தேடி அலைந்த தந்தை மரணம்

88

இறுதிப் போரிலும், அதற்கு முன்பும் காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளைத் தேடித் போராடும் உறவுகள் பலரில் மற்றுமொரு தந்தை சாவடைந்துள்ளார்.

தொடர்ச்சியாக 1200 நாட்களுக்கு மேலாக போராடிய இவரும் இவர் போன்றோரும் நடத்திய போராட்டங்கள் போகும் வழி தெரியாமல் திசையற்று நிற்கின்றன.

சின்னச்சாமி நல்லதம்பி என்கின்ற 69 அகவை கொண்ட தன் மகனைத் தேடிக்கொண்டிருந்தார்.

வவுனியாவில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட அவரது மகன், வெளியே வந்தவுடன் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்.

தன் மகன் உயிரோடு இருப்பான் என்ற நம்பிக்கையில் , தன் போன்ற நிலையிலுள்ள வேறு பலரோடு இணைந்து அவர் போராடி வந்தார். அவருக்கு அவரது மகன் உயிரோடிருப்பான் என்ற நம்பிக்கை இறுதிவரை இருந்தது. அவ்வாறு நம்பிய பலருடன் இணைந்து தம் உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கையில், நல்லதம்பி போலவே இதுவரையில் 40 பேருக்குமேல் உயிரிழந்துவிட்டனர்.

இந்தப் போராட்டங்கள் பாரப்பரின்றி கேட்பாரின்றி இன்றும் கண்ணீரோடு முடிவின்றித் தொடர்கின்றன.

இவர்கள் தீராத துயரத்தைத் தினசரி சுமந்துகொண்டு வாழ்கின்றனர்.

எல்லோரும் இறந்துவிட்டனர் என மொட்டையாகக் கூறுகிறது அரசு.

இவர்களின் கதி என்ன என்பதைக் கண்டறிவது தமிழ் அரசியற் கட்சிகளுக்கு ஒரு விடயமே அல்ல. ஆனால் அவர்களும் ஏறெடுத்து பார்க்கவில்லை.

தமிழ்மக்களைக் காப்பாற்ற தமிழ் மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்க எவர் உள்ளனர் என ஏங்கி ஏங்கி செத்து கொண்டிருக்கும் இவர்கள் கண்ணீருக்கு பதில் சொல்வார் யாரோ ?