இந்திய மிலிட்டரி காட்டும் பாகுபாடு – Feminism in Indian Army

260

பெண்ணியம் ~ Feminism

இப்போ சமீப காலமாக கடந்த இரண்டு வருடத்தில் பெண்ணியம் பற்றிய பேச்சுக்களும், பதிவுகளும் அதிக அளவில் பேசுபொருளாக உள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஒரு பையன் பெரிய ஆளானோனே அவன் army க்கு போனும் னு ஆச படுறான். அவன் வீட்டிலயும் பச்ச கொடி காட்டுறாங்க.

ஆனா இதே ஒரு பொன்னு army க்கு போனும்னு சொன்னா அடுத்த நிமிடமே சிவப்பு கொடி காட்டி கழுத்துல ஒரு மஞ்ச கையிற கட்டி வீட்டில ஒரு ஓரமா முடக்கி வச்சிருவாங்க.

இது தான் இங்க இருக்க social norms.

எழுதப்படாத ஒரு விதிமுறை.

ஆண் ~ பெண் ரெண்டு பேரும் சமம் னு சொல்ற சமூகம் அவங்க ரெண்டு பேருக்கும் சமஉரிமை தருதா?

எந்த விதத்தில் பெண்கள் ஆண்களை விட சளைத்தவர்கள் ஆகிறார்கள் னு வீரவசனம் பேசலாம் நா இங்க வரல.

Let me tell a குட்டி story, pay attention listen to me னு

ஒரு குட்டி கதை ஒன்னு சொல்றேன். கேளுங்க.

ஒரு மிலிட்டரி தந்தைக்கு ஒரு பொன்னு பிறக்குது. அப்பாவ மாறியே பிள்ளையும் வரனும்னு அவரோட பொன்னுக்கும், பையனுக்கும் சாப்பாடோட சேத்தி வீரத்தை ஊட்டி வளர்கிறாரு.

பையனுக்கு தான் பிரச்சினை இல்லையே எங்க போனும்னாலும் போலாம், எல்லா பக்கமும் பச்ச கொடி தான். அதனால அந்த பையன் மிலிட்டரி சேர்ந்துட்டான்.

அதுக்கப்புறம் அந்த பொன்னு ஒரு டிகிரி முடிச்சு , பறக்க ஆசப்படுது, அதே மாதிரி பறக்கவும் கத்துகிட்டது. Pilot training முடித்து SSB exam clear பன்னி ஒரு வழியாக Indian Air Force இல் அந்த பொன்னுக்கு இடம் கிடைக்கிது.

அந்த பொன்னோட சேத்து 25 பொன்னுங்க முதல் முறையா air force குள்ள நுழையிறாங்க. Air force இல் இருக்கும் விமானங்களும் அப்பதான் பெண் என்னும் உயிரினம் இந்தியாவில் இருக்குனு முதன்முதலாக பாக்குது.

இன்னிக்கு நாம பரவலாக status வைத்துகொண்டு பெருமை கொண்டாடும் கார்கில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயம் அது.

அப்போ அந்த பொன்னு கெத்தா போய், ” சார் நா சண்டைக்கு போறேன் ” னு சொல்ல, அங்க இருக்க defense ministry நீ வீட்டுக்கு போமானு சொல்ல, கடசியில் அந்த பெண் ministry இடம் சண்டை போட்டு தன்னை Operation Vijay இல் இணைத்து கொள்கிறார்.

அப்போ அந்த பொன்னுக்கு முதலில் கொடுத்த பணி Surveillance sorty.

அதாவது sorties னா, தனியாக முழு பொறுப்பு ஏற்றுகொள்வது போல.

Surveillance னா கண்காணித்தல்.

கிட்டத்தட்ட 18000 அடி உயரத்தில் ஒற்றை ஆளாக இந்த பெண்சிங்கம் தன்னோட surveillance sorties ஐ நடத்தி முடித்தது.

இந்த பொன்னும் அவங்களோட தோழி ஸ்ரீ வித்யா வும் சேர்ந்து கிட்டத்தட்ட 80 sorties ( single handed mission) களை சிறப்பாக செய்து முடித்தார்கள்.

ஏறத்தாழ 900 வீரர்களை இந்த பெண்மணிகள் காப்பாற்றி இருக்காங்க..

அந்த பொன்னு வேற யாரும் இல்ல, The Kargil Girl என்றழைக்ககூடிய Gunjan Saxena தான்.

நான் இதுவரைக்கும் சொன்னதுலாம் வெறும் teaser தான். இன்னும் trailer, main picture லாம் கூடிய சீக்கிரம் நாம திரையில பாப்போம்.

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.

இப்பேர்ப்பட்ட ஒரு பெண், எந்த அளவில் ஆணுக்கு சளைத்தவள் ஆகிறாள்?

காலங்காலமாக ஆம்பிள பிள்ள தா வேலைக்கு போனும், பொன்னுங்களா வேலைக்கே போக கூடாது னு பழக்கி வச்சிருந்தாங்க.

கொஞ்சம் காலமாக இப்போது அது மாறி பெண்களுக்கும் நிறைய வேலைகளில் சலுகைகளும் வாய்ப்புகளும் பெருமளவில் வழங்கப்பட்டது.

ஆனால் பெண்களுக்கு மிலிட்டரி போன்ற பெரிய வேலைகளில் சமமான வாய்ப்புகளும், சம உரிமை களும் தரப்பட்டாதா என்று கேட்டால்

இல்லை.

1992 க்கு வரை பெண்களுக்கு இந்திய பாதுக்காப்பு துறையில் (defense) வெறும் மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளே வழங்கப்பட்டது.

அதற்கு பின் தான் Short Service Commission ( SSC) ஐ கொண்டு வராங்க. அந்த SSC யின் கீழ் ஒரு பெண் 10 வருடம் தான் armed force இல் இருக்கமுடியுமென்று ஒரு விதிமுறை இருந்தது. பின் 2006 இல் அந்த 10 வருடத்தை 14 வருடாமக நீட்சி செய்றாங்க. ( SSC மூலமாக தான் Gunjan Saxena வும் Indian Armed Forces இல் உள்ள வராங்க) .

இவங்களுக்கு எல்லாம் இவங்களோட position இல் இருக்கும் மற்ற ஆண்களுக்கு நிகரான சம்பளம் வருமானு பாத்தா இல்ல.

Armed forces இல் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணியாற்றினால் தான் அவர்களுக்கு pension கிட்டும். ஆனா இதே SSC ல ஒரு பெண்ணுக்கு அதிகபட்சம் பணி ஆண்டுகள் 14 வருடம்.

இதனால மிலிட்டரி வேலை பார்க்கும் பெண்களுக்கு பென்ஷனும் வராது. காரணம் அவங்க மிலிட்டரி க்குள்ள நுழையும் வழி SSC. அதிலும் 14 ஆண்டுகள் தான் பணியாற்றனும்.

இதனால 2003 லயும் 2006 லயும் மிலிட்டரியிலுள்ள பெண் அதிகாரிகள் தங்களுக்கு permanent commission வேண்டுமென்று கோர்ட்டில் petition file பன்றாங்க.

அதன்படி 2010 இல்,

பாலின அடிப்படையில் எந்த ஒரு பெண்ணுக்கும் பதவியோ, பதவிகாலத்தையோ army இலும், Airforce இலும் குறைக்க கூடாது என்று delhi high court தீர்ப்பு வழங்கியது.

Women officers should be given permanent commission on par with men ~ Delhi High Court.

கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதுமே அதை Indian air force நடைமுறைபடுத்தியது. அதே போல இந்தியன் armed forces இல் உள்ள கடற்படை மற்றும் தரைப்படையை காட்டிலும் air force இல் அதிக பெண்களுக்கு இடம்கிடைத்தது.

ஆனால் இது இந்திய தரைப்படையில் நடைமுறைபடுத்த 9 ஆண்டுகள் ஆனது.

ஆனாலும் இன்று வரை பெண்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை ( women are restricted for commanding positions )

இதையடுத்து February 2020 இல் இந்திய Supreme court ஒரு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி எந்த ஒரு பெண்ணிற்கும் Commanding positions வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது. மேலும் Army இலும் அனைத்து பெண்களுக்கும் Permanent Commission வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதிலும் பெண்களுக்கு ஒரு பாகுபாடு காட்டப்பட்டது.

பொதுவாக force ah இரண்டு விதமாக பிரிப்பார்கள்.

1. Combat ( இரு நாட்டிற்கும் இடையிலான யுத்தத்தில் சண்டை போடுவது )

2. Non combatant (யுத்தத்தின் போது சண்டை போட மாட்டாங்க. ஆனால் இதர மிலிட்டரி பணிகளை செய்வாங்க)

அந்த பாகுபாடு என்னவென்றால் பெண்களுக்கு combat force இல் எந்தவொரு Commanding position ஓ, அதிகாரமோ வழங்கப்பட மாட்டாது.

இப்போ இந்த தீரப்பிற்கான extension இன்னும் 1 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு இடத்திலும் பெண்ணியம் பேசினாலே, ஒரு பக்கம் நம்மல முறைச்சு பார்க்கும் கூட்டம் இருக்கவே செய்யுது. எல்லா பெண்களுக்கும் சமஉரிமை வழங்காததால் தான் அங்காங்கே ஒரு feminism உம், feminist உம் முளைக்கிறார்கள். அதை யாரும் குற்றம் சொல்லாமல் பெண்ணியவாதம் பேசுறவங்க மேல குற்றம் சுமத்துரோம்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு முடங்கி வாழ்ந்த பெண்கள் தங்களது சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாமலேயே அடுப்பங்கரை தான் தன் சுதந்திரம் என்று நம்பிகொண்டிருந்த காலம் போய் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திர காற்றை வாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களின் முழு சுதந்திரம் காற்றை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவிலும் இல்லை.

ஒரு மனிதனை அவனுடைய நிறத்தாலும், சாதியாலும், மதத்தாலும் ஒடுக்கப்படுவது குற்றமெனில், அவர்களது பாலினத்தை கொண்டு பாகுபாடு காட்டுவதும் குற்றமே .

If racial and caste discrimination is crime, then

biological discrimination is also a crime.

நன்றி🙏🖤