
இறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.அவ்வாறு உத்தரவிட்ட ஒலிப்பதிவு தன்னிடமிருப்பதாகவும் தேவையேற்படின் அதனை வெளியிட தயாராக இருப்பதாகவும் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் எவரும் சரணடையவில்லையென இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கையிலேயே இதனை சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று கோத்தபாயவுடன் இருக்கு இராணுவ அதிகாரிகள் அனைவருமே மனித குலத்துக்கு எதிரான மிகப்பெரும் இனப்படுகொலை போரியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள்.சிலர் அரசுடன் முரண்பட்டுகொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
இன்று சிங்கள தேசம் தமக்குள்ள உள்ள உட்பகை காரணமாக இவற்றை ஒவ்வொன்றாக வெளிவிடுகின்றது.உண்மைகள் ஒரு போதும் தூங்குவதில்லை.சிங்களவர்களே ஒத்து கொண்டாலும்,தமிழர்களில் இருக்கும் சில நல்லிண போக்காளர்கள் நம்பாமல் பழக்க தோசத்தில் ஆதாரம் போதாது என்று சொல்வதற்கும் வாய்ப்பிருக்கின்றது.