பிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி

108

பிரான்ஸில் இடம்பெற்ற மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார். பொண்டி மாநகரசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது இளைய தலைமுறையினர் அரசியலில் ஆர்வம் செலுத்துகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம்.இது குறித்து பல தமிழ் உணர்வாளர்களும் மக்களும் தமது வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் கனவுகளுக்கு அமைய அரசியல் என்பது மக்களுக்கான சேவைகளுக்காக தம்மை அர்பணிப்பதே.பிரான்ஸ் சமூகத்தில் அரசியல் கோட்பாட்டாளர் ரூஷோவின் பங்கு மிகப்பெரியது..எமது அடுத்த தலைமுறைகள் இன்னும் இன்னும் அதிகமாக தம்மை உலகம் முழுவதும் விசாலப்படுத்தி தமிழர் அறத்தை முரசறைந்து கொட்டுவோம்.எதிர்கால சந்ததி ஒன்று தம் இனம் காக்க உலகின் அனைத்து மூலைகளில் இருந்து கிளர்ந்து எழுந்து சாதனைக்க படைக்க நாமும் வாழ்த்துகின்றோம்.

மனிதர்கள் இயல்பாக நல்லவர்கள்,ஆனால் அவர்கள் இயல்பை சமூகத்தில் உள்ள பேய்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திவிடுகின்றன – ரூஷோ