பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் மூவர் பலி- பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டது.

94

பிரான்சின் நிஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் இருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிஸ் நகர மேயர் இதனை பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என மேயர் தெரிவித்துள்ளார்.
மூவர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டது என காவல்துறையினா தெரிவித்துள்ளனர், பிரான்ஸ் அரசியல்வாதியொருவரும் இதனை உறுதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற் தேவாலய பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்

முகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த ஆசிரியர் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.