பிரான்ஸ் சுகாதார அமைச்சர் உட்பட பல முக்கிய புள்ளிகள் வீட்டில் காவல்துறை திடீர் சோதனை

94

குடியரசின் நீதி மன்றத்தால் ஜூலை மாதம் திறக்கப்பட்ட நீதி விசாரணையின் ஒரு பகுதியாக, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் அலுவலகங்களிலும் வீடுகளிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது,

பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Olivier Véranனின் வீட்டில் காவல்துறை திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிய சம்மந்தப்பட்ட அரசாங்க அமைச்சர்கள் மிகவும் மெதுவாக செயல்படுவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது குறித்து பிரான்ஸ் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாளுவது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் தற்போதைய மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் Agnès Buzyn, முன்னாள் பிரதமர் Edouard Philippe, முன்னாள் அரசாங்க செய்தித் தொடர்பாளர் Sibeth Ndiaye, சுகாதார இயக்குநர் Jérôme Salomon உட்பட பல முக்கிய அதிகாரிகள் வீட்டிலும் காவல்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (15/10/2020) வியாழக்கிழமை காலை சுகாதார அமைச்சர் Olivier Véranனின் வீட்டில் சோதனை நடவடிக்கைகள் ‘சிரமமின்றி’ நடந்ததாக சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.