பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து, ஒரு இலட்சம் பேர் வரை குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 100,306பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை மொத்தமாக 671,638பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 32,521பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில், 18,129பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். 77பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 538,811பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்1427பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.