ஞாயிற்றுக்கிழமைகளின் தொற்று எண்ணிக்கைகள் பெறப்படாத நிலையில், திங்கட்கிழமைகளில் எப்பொழுதுமே தொற்றுக்கள் மிகக் குறைவாகவே காட்டப்படும்.
பெறுபேறுகள் முழுமையாக பெறப்படாத நிலையிலும், கடந்த 24 மணிநேரத்திற்குள், 9.094 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்தத் தொற்று, 4.554.683 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 360 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் சாவடைந்தவர்கள் தொகை 94.956 ஆக உயர்ந்துள்ளது.
வைத்திசாலைகளில் மட்டும் 68.957 (+360) பேர் சாவடைந்துள்ளனர். முதியோர் இல்லங்களில் 25.999 பேர் சாவடைந்துள்ளனர்.
28.322 நோயாளிகள் கொரேனாத் தொற்றின் தீவிரத்தினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 2;099 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்திற்குள் 484 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 4.974 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் கொரோனாத் தொற்று விகிதமானது, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கொரேனாத் தொற்று விகிதமானது (Taux d’incidence) 100.000 பேரிற்கு 371 என அதிகரித்துள்ளது.