பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!

15

மீண்டும் கொரோனாத் தொற்றும் சாவுகளும் அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 3.093பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆய்வுகூடங்களின் பெறுபேறுகள் வழங்கப்படாத நிலையில் மிகக் குறைந்த அளவான தொற்றுக்களே அறிவிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை 20.000 இற்கும் மேற்பட்ட தொற்றுக்கள் இருந்தமை குறிப்பிடதக்கது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 146 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதானல் பிரான்சில் கொரோனாவினால் 62.573 பேர் சாவடைந்துள்ளனர்.

மருத்துவ மனைகளில் மட்டும் 43.378 பேர் சாவடைந்துள்ளனர்.

24.444 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2.640 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.