மாலை நைஸில் (ஆல்ப்ஸ்-மரைடிம்ஸ்) 40 வயது மதிக்கதக்க நபர் சுடப்பட்டுள்ளார்.காயமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேற்படி நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இவர் மீதான கொலை முயற்சி தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.மேற்படி நபருக்கு தொடையில் காயமடைந்துள்ளதுடன்,அவர் பாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,துறைசார் பாதுகாப்பின் குற்றவியல் படைப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.சேகரிக்கப்பட்ட முதல் கூறுகளின்படி, மூன்று அல்லது நான்கு ஷாட்கள் சுடப்பட்டுள்ளன. கறுப்பு நிற உடையணிந்த ஒருவர் சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது,ஆனால் இதுவரை யாரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை.